கோலிவுட் சினிமா.. முதன் முதலில் இசையமைப்பாளராக இருந்து ஹிட் நடிகரானது யார் தெரியுமா?
Music Director to Actor : தமிழ் சினிமாவை பொறுத்தவரை இசையமைப்பாளராக இருந்து அதன் பிறகு நடிகராக உருவெடுத்தவர்கள் பலர் உண்டு.
Vijay Antony
தமிழ் திரையுலகில் பன்முகத் திறமை கொண்ட கலைஞர்களுக்கு எந்த காலகட்டத்திலும் பஞ்சமே இருந்தது கிடையாது. தமிழ் சினிமா துவங்கிய காலத்தில் இருந்து, இன்று வரை பன்முக திறமைகளோடு தமிழ் திரை உலகில் ஜாம்பவான்கள் பலர் வலம் வந்து கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதேபோல திரை துறையை பொறுத்தவரை குறிப்பிட்ட ஒரு துறையில் வல்லவராக இருக்கும் கலைஞர்கள், வேறு ஒரு துறையிலும் சிறந்து விளங்குவது உண்டு.
அந்த வகையில் இசையமைப்பாளராக மட்டுமே தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, பிற்காலத்தில் நடிகர்களாக மாறி, மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பலர் தொடர்ச்சியாக பெற்று வருகின்றனர். குறிப்பாக இக்கால சினிமாவை எடுத்துக் கொண்டால் கடந்த 2017 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "மீசைய முறுக்கு" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகராகவும், இயக்குனராகவும், திரைக்கதை எழுத்தாளராகவும் அறிமுகமானவர் தான் ஹிப் ஹாப் தமிழா ஆதி.
இலங்கையில் கொடிகட்டி பறந்த சிவாஜி.. ஒரே படத்தில் அவரை ஓவர்டேக் செய்த கமல் - எந்த படம் அது?
Hiphop adhi
ஆனால் அதற்கு முன்னதாகவே கடந்த 2015ம் ஆண்டு பிரபல நடிகர் விஷால் நடிப்பில் வெளியான "ஆம்பள" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இவர் இசையமைப்பாளராக தமிழ் திரை உலகில் களம் இறங்கினார். அதற்கு முன்னதாகவே பல இண்டிபெண்டன்ட் இசை ஆல்பங்களை உருவாக்கி வெற்றி கண்டவர் ஹிப்ஹாப் தமிழா ஆதி என்பது குறிப்பிடத்தக்கது. தற்பொழுது தன்னுடைய இசை பயணத்தையும் ஹீரோ பயணத்தையும் சீராக முன்னெடுத்துச் செல்கிறார். அண்மையில் அவர் நடிப்பில் வெளியான "கடைசி உலகப் போர்" என்கின்ற திரைப்படமும் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பு தொடர்ச்சியாக பெற்று வருகிறது.
actor vijay antony
அதே போல விஜய் ஆண்டனி கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "சுக்கிரன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் தான் இவர் இசையமைப்பாளராக தமிழ் திரை உலகில் களம் இறங்கினார். தொடர்ச்சியாக நல்ல பல படங்களில் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வந்த விஜய் ஆண்டனி, கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனர் ஜீவா ஷங்கர் இயக்கத்தில் வெளியான "நான்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் நடிகனாகவும் தமிழ் திரையுலகில் களமிறங்கினார்.
இன்றைய தேதியில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை அதிக திரைப்படங்களை கையில் வைத்திருக்கும் வெகு சில நடிகர்களில் இவரும் ஒருவர். ஏற்கனவே இந்த 2024 ஆம் ஆண்டில் "ரோமியோ", "மழை பிடிக்காத மனிதன்" மற்றும் "ஹிட்லர்" ஆகிய மூன்று வெற்றி திரைப்படங்களை தமிழ் திரை உலகிற்கு கொடுத்திருக்கிறார். மேலும் அவருடைய நடிப்பில் இந்த ஆண்டு இன்னும் பல படங்கள் வெளியாக உள்ளது.
Papanasam Sivan
இப்படி தமிழ் திரையுலகை பொருத்தவரை இசையமைப்பாளராக பயணித்து அதன் பிறகு நடிகராக தமிழ் திரை உலகில் பெரிய உச்சங்களை தொட்டவர்கள் வெகு சிலர் தான். ஆனால் உண்மையில் முதல் முதலாக 1930களிலேயே ஒரு இசையமைப்பாளர் மிகப் பெரிய நடிகராக உருவெடுத்திருக்கிறார். அவருடைய பெயர் தான் பாபநாசம் சிவன். தமிழ் திரையுலகின் தொடக்க காலத்தில் மிகப்பெரிய இசையமைப்பாளராக பயணித்து வந்த பாபநாசம் சிவன் கடந்த 1936ம் ஆண்டு வெளியான குசேலா என்ற படத்தில் நடித்து நடிகராக மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றார்.
அந்த படத்தில் மொத்தம் 30 பாடல்களாம், அந்த அனைத்து பாடல்களுக்கான இசையை அமைத்ததும் அவர் தான். அந்த படத்தின் மெகா ஹிட் வெற்றிக்கு பிறகு "குபேரா", "தியாக பூமி" மற்றும் "பக்த சேதா" உள்ளிட்ட பல திரைப்படங்களில் முன்னணி நாயகனாக நடித்து அசத்தியிருக்கிறார் பாபநாசம் சிவன்.