நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், தனது மனைவியை சரமாரியாக கத்தியால் குத்தி படுகொலை செய்த சம்பவம் சூளைமேட்டில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்தவர் செனு டிரைவராக வேலை பார்க்கிறார். இவரது மனைவி ஷாலினி செவிலியராக வேலை செய்கிறார்.  இவர்கள் இரண்டு மகன்கலுடன் சூளைமேட்டில் வசித்து வருகின்றனர். செவிலியரான இருக்கும் ஷாலினி உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ள வயதானவர்களின் வீடுகளுக்கு சென்று மருத்துவம் பார்த்து வந்தார்.

இந்நிலையில், செனு கடந்த 6 மாதங்களாக சரிவர வேலைக்கு செல்லாமல் இருந்திருக்கிறார். ஷாலனிக்கு பல ஆண் நண்பர்களுடன்  பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் செனு தனது மனைவியை அடிக்கடி அடித்திருக்கிறார்.

இந்நிலையில், நேற்று மதியம் ஷாலினி வெளியே சென்று வந்துள்ளார். அப்போது ‘ஏன் காலதாமதமாக வந்தாய்’ என்று கேட்டு கடுமையான வார்த்தைகளால்  திட்டி ஷாலனியை அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது. இதில் வலி தாங்க முடியாமல் ஷாலினி ‘காப்பாத்துங்கள்....காப்பாத்துங்கள்’  சத்தம் போட்டு கத்தியிருக்கிறார்.

ஷாலினியின் அலறல் சத்தம் கேட்டு அருகில் வசித்த பொதுமக்கள் ஓடிவந்தனர். ஆனால் வீட்டின் உல் பக்கமாக தாழ்பாள் போட்டுவிட்டுள்ளதால் திறக்காமல் தனது மனைவியை அடித்தபடியே செனு இருந்துள்ளார்.

இதுகுறித்து, போலீஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். தகவலறிந்த சூளைமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அப்போது, செனு தனது மனைவியை காய்கறி வெட்டும் கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் ஷாலினி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார்.

பின்னர், போலீசார் மனைவியை கொலை செய்த செனுவை கைது செய்து அவரிடம் இருந்து கத்தியை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து, ஷாலினி உடலை பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். கைது செய்யப்பட்ட செனுவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது செனு, தனது மனைவி வீடுகளில் செவிலியராக வேலை செய்கிறார். வெளியில் செல்லும் எனது மனைவிக்கு வேறு ஒரு நபருடன் நெருங்கி பழகி வந்தார்.  இதை நான் நேரில் பார்த்து பலமுறை கண்டித்தேன். ஆனால் அவர் ஆண் நண்பருடனான பழக்கத்தை விடவில்லை.

என்னை விட, இரண்டு குழந்தைகளை விட அவளுக்கு கள்ளக்காதலன் அவளுக்கு முக்கியமாக இருந்தது. என்னை கவனிக்க வில்லை. இரண்டு குழந்தைகளுக்கும் நேரத்திற்கு சாப்பாடு கொடுப்பதில்லை.

இதனால் நீ வேலைக்கு செல்ல தேவையில்லை, வீட்டிலேயே இரு என்று கூறினேன். ஆனால், அவர் என் பேச்சை ஏற்காமல் வேலைக்கு சென்று வந்தார். இதனால் ஆத்திரத்தில் எனது மனைவியை குத்தி கொலை செய்தேன் என போலீசாரிடம் கூறியுள்ளார்.