12:37 AM (IST) Jun 10

பள்ளி மாணவர்கள் கனவை சிதைத்த திமுக.. பள்ளிக் கல்வித் துறை அமைச்சரே பொறுப்பு - அண்ணாமலை அதிரடி

பள்ளி மாணவர்களின் கனவுகளைக் கலைத்திருப்பது நியாயமா ? பள்ளிக் கல்வித் துறை அமைச்சரே இதற்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார் பாஜக தலைவர் அண்ணாமலை.

12:18 AM (IST) Jun 10

ஹனிமூன் சென்ற இடத்தில் தமிழ்நாடு தம்பதி இறப்பு.. திருமணமாகி 1 வாரத்தில் பாலி தீவில் அதிர்ச்சி சம்பவம்

இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவில் இன்பச் சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த புதுமண தம்பதி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

11:54 PM (IST) Jun 09

உங்கள் வங்கி கணக்கில் 2000 ரூபாய் வரும்.. மத்திய அரசு அனுப்பும் பணம்! முழு விபரம் உள்ளே

பிரதமர் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் 14வது தவணை ஜூன் மூன்றாவது வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவை பற்றி விரிவாக பார்க்கலாம்.

11:33 PM (IST) Jun 09

1 நாள் முன்பே தமிழகம் வரும் அமித்ஷா.. அண்ணாமலையுடன் மீட்டிங்! இபிஎஸ் - ஓபிஎஸ் உடன் சந்திப்பா?

பொதுத்தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக சென்னையில் நட்சத்திர விடுதியில் பாஜக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் அமித்ஷா.

11:20 PM (IST) Jun 09

திருமணம் ஆன தம்பதிகள் போட்டோ சூட் எடுக்க அனுமதி - கிடப்பில் போடப்பட்ட உத்தரவு !!

மதுரை ரயில்வே கோட்டத்தில் திருமணம் ஆன தம்பதிகள்போட்டோ சூட் எடுக்க அனுமதி தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடாததால் உத்தரவு கிடப்பில் போடப்பட்டுள்ளது.

11:01 PM (IST) Jun 09

அத்திகடவு - பில்லூர் பிரதான குடிநீர் குழாய் உடைப்பு.. கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீண்

பெரியநாயக்கன்பாளையம் அருகே அத்திகடவு - பில்லூர் பிரதான குடிநீர் குழாய் உடைந்ததால் கோடிக்கணக்கான லிட்டர் தண்ணீர் வீணானது.

09:22 PM (IST) Jun 09

மங்காத்தா பட பாணியில்.. ஓடும் பேருந்தில் 2 வீலரில் வந்து கொள்ளையடித்த திருடர்கள் - வைரல் CCTV வீடியோ

ஓடும் பேருந்தில் இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்று கொள்ளையடிக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

08:59 PM (IST) Jun 09

புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் மாற்றம்.. எம்.பி வைத்தியலிங்கம் தேர்வு - காங்கிரஸ் அறிவிப்பு

புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவராக வைத்திலிங்கம் எம்.பி.யை நியமித்து காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே உத்தரவிட்டுள்ளார்.

08:35 PM (IST) Jun 09

தமிழ்நாட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளில் ரூ. 8 லட்சம் கோடி வரி இழப்பு.. சிபிஐ விசாரணை கேட்கும் அன்புமணி ராமதாஸ்

டாஸ்மாக்கின் கள்ள சந்தைகளால் தமிழ்நாட்டிற்கு கடந்த 10 ஆண்டுகளில் 8 லட்சம் கோடி ரூபாய் வரி இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும் இதனை சிபிஐ விசாரிக்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

08:12 PM (IST) Jun 09

குறைந்த கட்டணம்.. இனிமே ரயில் நிலையத்தில் தான் வெட்டிங் போட்டோஷூட் - எங்க தெரியுமா?

ரயில் நிலையத்தில் போட்டோஷூட் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு புதுமணத் தம்பதிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

07:47 PM (IST) Jun 09

Rugged லுக்.. பக்காவான அம்சங்களுடன் வரும் 2024 ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்டில் என்னவெல்லாம் ஸ்பெஷல்?

புதிய ரேஞ்ச் ரோவர்ஸ்போர்ட் எஸ்வி புகைப்படங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன் சிறப்பம்சங்களை இங்கு பார்க்கலாம்.

07:31 PM (IST) Jun 09

ரயிலை தவறவிட்டாலோ, டிக்கெட்டை ரத்து செய்தாலோ, முழு பணத்தை திரும்ப பெறலாம்.. எப்படி தெரியுமா?

ஒரு சில காரணங்களால் நீங்கள் ரயில் பயணத்தை ரத்து செய்தாலோ அல்லது ரயிலை தவறவிட்டாலோ பணத்தை திரும்ப பெற முடியும்.

06:12 PM (IST) Jun 09

செயற்கை நுண்ணறிவால் வேலை போகாது..AIக்கு கட்டுப்பாட்டை விதிக்கும் இந்தியா - மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்

மக்களுக்கு தீங்கு விளைவிக்காத வகையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒன்றிய அரசு ஒழுங்குபடுத்தும் என்று மின்னணு மற்றும் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.

06:11 PM (IST) Jun 09

இலவசம்.. நீங்க வந்தா மட்டும் போதும்! ஜியோவை தொடர்ந்து இலவசத்தை அறிவித்த Disney+ Hotstar

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் ஐசிசி ஆண்கள் உலகக் கோப்பை மற்றும் ஆசிய கோப்பை 2023 ஐ இந்தியாவில் இலவசமாக வழங்குகிறது.

05:11 PM (IST) Jun 09

பிளஸ் 2 துணைத்தேர்வு ஹால் டிக்கெட்டை இந்த தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் | முழு விபரம்

பிளஸ் 2 துணைத்தேர்வுஹால் டிக்கெட்டை இந்த தேதி முதல் பதிவிறக்கம் செய்யலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

03:18 PM (IST) Jun 09

காவிரி டெல்டா பகுதிகளில் தூர்வாரும் பணி! - முதல்வர் ஸ்டாலின் ஆய்வு!

தஞ்சை மாவட்டம் ஆலக்குடி முதலை முத்துவாரி மற்றும் வின்னமங்களம் பிள்ளை வாய்க்கால் ஆகியவற்றில் நடந்து முடிந்த தூர்வாரும் பணிகளை முதல்வர் ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார்.

02:36 PM (IST) Jun 09

திருமணத்துக்கு பின் துரத்திய பிரச்சனைகள்... நயன் - விக்கி ஜோடி கடந்த ஓராண்டில் சிக்கிய சர்ச்சைகள் இத்தனையா..!

நடிகை நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் கடந்தாண்டு ஜூன் மாதம் 9-ம் தேதி திருமணம் செய்துகொண்டனர். இந்த காதல் ஜோடி திருமண பந்தத்தில் இணைந்து இன்றுடன் ஓராண்டு நிறைவடைகிறது. வெற்றிகரமாக இரண்டாவது ஆண்டில் கணவன், மனைவியாக காலடி எடுத்து வைத்துள்ள விக்கி - நயன் ஜோடிக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனிடையே திருமணநாளை ஒட்டி இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் சோதனை காலம் என குறிப்பிட்டு இருந்தார். நிஜமாகவே திருமணத்துக்கு பின் பல சர்ச்சைகளில் சிக்கி உள்ளது இந்த ஜோடி, 

01:13 PM (IST) Jun 09

பெத்த அப்பனுக்கே தெரியாம என் புள்ள உடலை பொண்டாட்டி அடக்கம் பண்ணிட்டா! சாவில் மர்மம் இருக்கு! கதறும் தந்தை.!

சென்னையில் 3 வயது மகன் சாவில் சந்தேகம் இருப்பதாக மனைவியை பிரிந்த கணவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

குற்றம் செய்திகள்

12:54 PM (IST) Jun 09

பாராட்டி தள்ளிய ப்ளூ சட்டை மாறன்... போர் தொழில் படத்துல அப்படி என்னதான்பா இருக்கு? - விமர்சனம் இதோ

புதுமுக இயக்குனர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் அசோக் செல்வன், சரத்குமார் நடிப்பில் வெளியாகி உள்ள போர் தொழில் திரைப்படத்தின் டுவிட்டர் விமர்சனத்தை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

12:50 PM (IST) Jun 09

நம்பி வந்த காதலி.. நண்பருக்கு விருந்தாக்கி ரசித்த காதலன்.. வெளியான பகீர் தகவல்..!

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து புருஷோத்தம் காதலிக்கு கொடுத்துள்ளார். மயக்கம் அடைந்த காதலியை முதலில் புருஷோத்தம் பலாத்காரம் செய்துள்ளார்.

பலாத்காரம்