திருமணம் ஆன தம்பதிகள் போட்டோ சூட் எடுக்க அனுமதி - கிடப்பில் போடப்பட்ட உத்தரவு !!
மதுரை ரயில்வே கோட்டத்தில் திருமணம் ஆன தம்பதிகள் போட்டோ சூட் எடுக்க அனுமதி தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடாததால் உத்தரவு கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ரயில்வே சார்பாக ரயில் நிலையங்களில் வருமானத்தை பெருக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது அதன் ஒரு பகுதியாக ரயில் நிலையங்களில் உள்ளூர் பொருட்களை விற்பனை செய்ய கடைகள் திறப்பு மற்றும் ரயில் நிலையத்தின் விளம்பரங்கள் செய்வதற்கு கட்டணம் விதிக்கப்படுகிறது.
மேலும், ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் ரயில் பெட்டிகளில் விளம்பரம் செய்ய கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வகையான வருமானங்கள் உருவாக்கி வரும் நிலையில் ஏற்கனவே ரயில் நிலையங்களில் திரைப்படங்கள் எடுப்பதற்குஉத்தரவு நடைமுறை உள்ள நிலையில் புதுமண தம்பதிகள் அல்லது விளம்பரதாரர்கள் புகைப்படங்கள் எடுப்பதற்கு உத்தரவானது கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட நிலையில் ஓராண்டு ஆகியுள்ளது.
இந்த உத்தரவானது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படாமல், வழிகாட்டுதல் நெறிமுறைகள் வெளியிடப்படாமலும் இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இனியாவது அரசு நடவடிக்கை எடுக்குமா ? என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
இதையும் படிங்க..இனிமே பெங்களூரு டூ சென்னைக்கு செல்ல 2 மணி நேரம் போதும்.. வந்தே பாரத் ரயிலை மிஞ்சும் வேகம் !!