Asianet News TamilAsianet News Tamil

1 நாள் முன்பே தமிழகம் வரும் அமித்ஷா.. அண்ணாமலையுடன் மீட்டிங்! இபிஎஸ் - ஓபிஎஸ் உடன் சந்திப்பா?

பொதுத்தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக சென்னையில் நட்சத்திர விடுதியில் பாஜக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார் அமித்ஷா.

Amit Shah coming to Tamil Nadu Urgent consultation with alliance parties tomorrow
Author
First Published Jun 9, 2023, 11:26 PM IST

நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்து வரும் சூழலில் அமித் ஷா நாளை சென்னை வருகிறார். நாளை காலை 9 மணிக்கு சென்னைக்கு விமானம் மூலம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கிண்டியில் உள்ள ஐடிசி நட்சத்திர விடுதியில் தங்கி தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து ஆலோசனை செய்ய உள்ளார்.

வரும் 11ஆம் தேதி தமிழகம் வருவதாக இருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் பயணத்திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒருநாள் முன்னதாகவே நாளை அவர் தமிழ்நாடு வருவார் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. அவரின் பயணத்திட்டம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்திக்க இருக்கிறார்.

Amit Shah coming to Tamil Nadu Urgent consultation with alliance parties tomorrow

இதையும் படிங்க..டிடிவி தினகரனுக்காக ஓபிஎஸ் செய்த காரியம்.. இப்படியொரு ஒற்றுமையா.!! கண்ணீர்விட்ட அதிமுக ர.ரக்கள்!

நாளை இரவு 9 மணிக்கு சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, கிண்டியில் உள்ள ஐடிசி நட்சத்திர ஓட்டலில் தங்க உள்ளார். அப்போது முக்கிய அரசியல் கட்சி தலைவர்களை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைதொடர்ந்து வரும் 11ம் தேதி கோவிலம்பாக்கத்தில் நடைபெற உள்ள, பாஜகவின் நாடாளுமன்ற  தொகுதி பொறுப்பாளர்கள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்கிறார்.

பிறகு பிற்பகலில் வேலூரில் நடைபெறும் பாஜக பொதுக்கூட்டத்திலும் அமித் ஷா பங்கேற்கிறார்.    பாஜக - அதிமுக கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமியுடன் சந்திப்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த முறை டெல்லி சென்ற எடப்பாடி பழனிசாமியுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தியதன் அடுத்தகட்டமாக இந்த கூட்டம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

Amit Shah coming to Tamil Nadu Urgent consultation with alliance parties tomorrow

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக கூட்டணி கட்சி தலைவர்களும் சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. நாடாளுமன்றத் தேர்தலில் தொகுதிகளை கைப்பற்றுவதற்கான முக்கிய அறிவுறுத்தல்களையும், ஆலோசனைகளையும் பாஜக நிர்வாகிகளுக்கு அமித் ஷா வழங்குவார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது. தமிழக அரசியல் களத்தில் அமித்ஷாவின் பயணம் புது திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க..பொறுத்தது போதும்.. 2024 தேர்தல் பாஜகவுக்கு பாடமாக இருக்க வேண்டும் - திமுகவினருக்கு உத்தரவு போட்ட ஸ்டாலின்

Follow Us:
Download App:
  • android
  • ios