ஹனிமூன் சென்ற இடத்தில் தமிழ்நாடு தம்பதி இறப்பு.. திருமணமாகி 1 வாரத்தில் பாலி தீவில் அதிர்ச்சி சம்பவம்
இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவில் இன்பச் சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த புதுமண தம்பதி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
விடுமுறை நேரம் கிடைக்கும் போது எல்லாம் காதலர்களும், காதல் தம்பதிகளும் வெளியே தனியாக நேரம் செலவிட நினைப்பார்கள். அழகான மலைப்பிரதேசத்தில் சேர்ந்து குடிக்கும் தேநீர், கடற்கரையோரம் ஒரு கேண்டில் லைட் டின்னர் எல்லாம் தான் ரொமான்டிக் நினைவுகளை சேர்க்கும் சிறந்த வழிகள்.
உள்ளூர் இடங்களுக்கு எத்தனை நாள் தான் செல்வது. ஒரு முறை வெளிநாட்டு இடங்களுக்கு போலாம் என்ற எண்ணம் வரும். ஆனால் ரொமான்டிக் ட்ரிப்புக்கு சிறந்த இடம் எது என்ற குழப்பம் ஏற்படும். அதனால் தற்போது பலரும் இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவுக்கு செல்ல தொடங்கியுள்ளனர்.
இதையும் படிங்க..இனிமே பெங்களூரு டூ சென்னைக்கு செல்ல 2 மணி நேரம் போதும்.. வந்தே பாரத் ரயிலை மிஞ்சும் வேகம் !!
இந்த நிலையில் பாலி தீவில் இன்பச் சுற்றுலா சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த புதுமண தம்பதி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்தை சேர்ந்த மருத்துவர் லோகேஷ்வரனுக்கும் பூவிருந்த வல்லியை சேர்ந்த விபூஷ்னிக்கும் கடந்த 1 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்து இன்பச் சுற்றுலாக்கு இந்தோனேசியா நாட்டில் உள்ள பாலி தீவிற்கு சென்றுள்ளனர்.
பாலி தீவில் விரைவு மோட்டார் படகில் சென்றபோது விபத்து ஏற்பட்டு இருவரும் உயிரிழந்துள்ளனர். காதலித்துப் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு இல்வாழ்க்கையைத் தொடங்கிய ஒரு வாரத்தில் இருவரும் விபத்தில் இறந்த சம்பவம் அவர்கள் குடும்பத்தினரிடையே அதிர்ச்சியையும், கவலையையும் உண்டாக்கி உள்ளது.
இதையும் படிங்க..iPhone 11 வெறும் ரூ.8,950க்கு கிடைக்கிறது! இதை விட்டா வேற சான்ஸ் கிடைக்காது - முழு விபரம் !!