09:53 PM (IST) Oct 29

கேரள குண்டு வெடிப்புக்கு காரணம் நான் தான்.. பேஸ்புக்கில் லைவ் வீடியோ..யார் அந்த டொமினிக் மார்ட்டின்.?

களமசேரியில் நடந்த யெகோவாவின் சாட்சிகள் மாநாட்டில் வெடிகுண்டு வைத்தது நான் தான் என்று கொடகரா ஸ்டேஷனில் ஆஜராவதற்கு முன்பு டொமினிக் மார்ட்டின் பேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்பினார்.

08:55 PM (IST) Oct 29

திமுக அமைச்சர்களுக்கு தண்டனை உறுதி.. பாஜக தலைவர் அண்ணாமலை கொடுத்த வார்னிங்..!!

திமுகவின் ஒவ்வொரு ஊழல் அமைச்சருக்கும் எதிராக சட்டப் போராட்டம் நடத்தி, அவர்களுக்கு சட்டரீதியான தண்டனை கிடைப்பதை தமிழக பாஜக நிச்சயம் உறுதி செய்யும் என்று அண்ணாமலை கூறியுள்ளார்.

06:54 PM (IST) Oct 29

அன்லிமிடெட் டேட்டா.. நெட்பிளிக்ஸ் 84 நாட்களுக்கு இலவசம்.. இப்படியொரு ரீசார்ஜ் பிளான் தெரியுமா?

ரிலையன்ஸ்ஜியோ 84 நாட்கள் செல்லுபடியாகும் இரண்டு ப்ரீபெய்ட் திட்டங்களைக் கொண்டுள்ளது. இதில் Netflix இன் இலவச சந்தா கிடைக்கிறது. இரண்டு திட்டங்களின் வாடிக்கையாளர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டா கிடைக்கும்.

06:27 PM (IST) Oct 29

லோக்கல் டூ லாங் ட்ரைவ் எதுவாக இருந்தாலும் ஓகே.. பக்காவான எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இதுதான்..

ஆம்பியர் மேக்னஸ் இஎக்ஸ் என்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையில் சக்கைபோடு போட்டு வருகிறது. இதன் விலை மற்றும் பிற அம்சங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

05:14 PM (IST) Oct 29

தமிழக அரச செலவில் ராமேசுவரம் - காசி ஆன்மிக பயணம்: பக்தர்கள் விண்ணப்பிக்க அழைப்பு!

தமிழக அரச செலவில் ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு பக்தா்கள் ஆன்மிக பயணம் அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.

04:56 PM (IST) Oct 29

குறைந்த விலையில் குஜராத்தை சுற்றிப் பார்க்கலாம்.. ஐஆர்சிடிசியின் கம்மி பட்ஜெட் டூர் பேக்கேஜ்..

ஐஆர்சிடிசி க்ளோரியஸ் குஜராத்டூர் பேக்கேஜைக் கொண்டு வருகிறது. டிசம்பர் 13 முதல் 13 நாட்கள் பயணத்தில் அழகான இடங்களைப் பார்வையிடலாம்.

04:25 PM (IST) Oct 29

ஆப்பிள் ஐபோன் 14 ரூ.20 ஆயிரம் தானா.. அதிரடி தள்ளுபடியை மிஸ் பண்ணிடாதீங்க..!

ஐபோன் 14 ரூ.20 ஆயிரத்திற்கும் குறைவான விலையில் கிடைக்கிறது. தள்ளுபடி விலையில் ஐபோனை எப்படி வாங்குவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

04:03 PM (IST) Oct 29

மாணவர்களுக்கு குட் நியூஸ்.. மாணவர்களுக்கு ஆண்டுதோறும் ரூ.50 ஆயிரம் உதவித்தொகை.. எப்படி பெறுவது?

இந்த மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ரூ. 50 ஆயிரம் உதவித்தொகை பெறுவார்கள். இதற்கு யாருக்கெல்லாம் தகுதி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

03:57 PM (IST) Oct 29

தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

03:46 PM (IST) Oct 29

தமிழ்நாட்டின் பெருமைமிகு மரபு: பிரதமர் மோடி நினைவு கூர்ந்த இரண்டு தமிழர்கள்!

கன்னியாகுமாரியின் ஏ.கே. பெருமாள், எழுத்தாளர் சிவசங்கரி ஆகியோரை நினைவு கூர்ந்து மான் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசினார்

03:02 PM (IST) Oct 29

விநியோகச் சங்கிலி இயக்கத்தில் ஒத்துழைப்பு: ஜப்பான் ஜி7 கூட்டத்தில் அமைச்சர் வலியுறுத்தல்!

விநியோகச் சங்கிலிகளின் இயக்கத்தை எளிதாக்க ஒத்துழைக்குமாறு உலக நாடுகளை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வலியுறுத்தினார்

02:33 PM (IST) Oct 29

பிக்பாஸ் விக்ரமன் மீது பாலியல் வன்கொடுமை புகார் கூறிய பெண்... 13 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான விக்ரமன் மீது வடபழனி மகளிர் காவல்நிலைய போலீசார் 13 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

02:13 PM (IST) Oct 29

கேரளாவில் வெடித்தது டிபன் பாக்ஸ் குண்டு: டிஜிபி தகவல்!

கேரளாவில் வெடித்தது IED வகை டிபன் பாக்ஸ் குண்டு என அம்மாநில டிஜிபி தகவல் தெரிவித்துள்ளார்

01:49 PM (IST) Oct 29

அஜித்துடன் அடுத்த படம் எப்போ?... ஆள விடுங்கடா சாமினு கும்பிடுபோட்டு கிளம்பிய இயக்குனர் சிவா

ஜப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சிறுத்தை சிவா, அஜித்துடன் மீண்டும் பணியாற்றுவது பற்றி கொடுத்த ரியாக்‌ஷன் வைரலாகி வருகிறது.

01:43 PM (IST) Oct 29

கேரளா குண்டு வெடிப்பு.. தமிழக எல்லையோர மாவட்டங்களில் தீவிர கண்காணிப்பு

கேரள மாநிலம் களமசேரி குண்டு வெடிப்பு சம்பவத்தை அடுத்து தமிழ்நாட்டின் எல்லையோர மாவட்ட சோதனைச் சாவடிகளில் தீவிர கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

01:39 PM (IST) Oct 29

விஸ்வகர்மா யோஜனா அல்ல மனுதர்ம யோஜனா திட்டம்: கி.வீரமணி காட்டம்!

விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் கீழ், ஏமாந்தால் நம் பிள்ளைகள் மீண்டும் படிக்க சொல்ல மாட்டார்கள் என திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்

01:11 PM (IST) Oct 29

ஜெயிலர் படம் தர்ம அடி வாங்கிய இடத்தில்... அதைவிட 6 மடங்கு அதிக வசூலை வாரிக்குவித்து கெத்து காட்டிய லியோ

நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தின் இந்தி வெர்ஷன் பாக்ஸ் ஆபிஸில் ஜெயிலர் படத்தை விட 6 மடங்கு வசூலை வாரிக்குவித்து உள்ளது.

12:44 PM (IST) Oct 29

மோடி முதல்வராக இருக்கும்போது பிரதமராவேனு நினைச்சாரா? அதுமாதிரி தான் இபிஎஸ்.! ரவுசு காட்டும் ராஜன் செல்லப்பா.!

உதயநிதி ஸ்டாலின் முட்டையை காட்டினாலும் செங்கலை காட்டினாலும் திமுக ஆட்சி ஒருமுறைதான் ஆட்சியில் இருக்கும். தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சியை பிடிக்காது என ராஜன் செல்லப்பா கூறியுள்ளார். 

12:40 PM (IST) Oct 29

சென்னை விமான நிலையத்தில் பயங்கரம்.. சொகுசு கார் மோதி தூக்கி வீசப்பட்ட 7 பேர் படுகாயம்..!

சென்னை விமான நிலையம் அருகே கட்டுப்பாட்டை இழந்த சொகுசு கார் மோதியதில் 7 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

12:09 PM (IST) Oct 29

ஆறு மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

திருவள்ளூர், கடலூர், செங்கல்பட்டு, திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுமுறை மாவட்டங்களில் பகல் 1 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.