ஜெயிலர் படம் தர்ம அடி வாங்கிய இடத்தில்... அதைவிட 6 மடங்கு அதிக வசூலை வாரிக்குவித்து கெத்து காட்டிய லியோ
நடிகர் விஜய்யின் லியோ திரைப்படத்தின் இந்தி வெர்ஷன் பாக்ஸ் ஆபிஸில் ஜெயிலர் படத்தை விட 6 மடங்கு வசூலை வாரிக்குவித்து உள்ளது.
Jailer vs Leo
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.650 கோடிக்கு மேல் வசூலித்து பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இப்படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் வசூலை வாரிக்குவித்தாலும், இந்தியில் மட்டும் தர்ம அடி வாங்கியது. ஜெயிலர் திரைப்படத்தின் இந்தி வெர்ஷன் வட இந்தியாவில் ரூ.5.35 கோடி வசூலித்து இருந்தது. இதற்கு காரணம் அங்குள்ள மல்டிபிளக்ஸ்களில் ஜெயிலர் படம் வெளியிடப்படவில்லை.
Rajini, vijay
மல்டிபிளக்ஸுகளை பொறுத்தவரை படம் வெளியாகி 8 வாரங்களுக்கு பின்னரே ஓடிடியில் வெளியிட வேண்டும். ஆனால் தமிழ் படங்கள் திரையரங்குகளில் ரிலீஸ் ஆன ஒரு மாதத்தில் வெளியிடப்படுவது விதியாக உள்ளது. அந்த விதி வட இந்தியாவில் செல்லுபடியாகாததால் தமிழ் படங்களை அங்குள்ள மல்டிபிளக்ஸுகளில் ரிலீஸ் செய்ய மறுத்துவிடுகின்றனர். அதனால் தான் ஜெயிலர் திரைப்படம் வட மாநிலங்களில் உள்ள மல்டிபிளக்ஸுகளில் வெளியிடப்படவில்லை.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Jailer movie hindi collection
அதே நிலையில் தான் விஜய்யின் லியோ படமும் வட இந்தியாவில் ரிலீஸ் செய்யப்பட்டது. ஆனால் ஜெயிலர் படத்தைக் காட்டிலும் லியோ படத்துக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், லியோ படத்தின் இந்தி வெர்ஷன், நான்கு தினங்களிலேயே ஜெயிலர் பட இந்தி வெர்ஷனின் லைஃப் டைம் வசூலை முறியடித்துவிட்டது.
Leo movie hindi collection
அந்த வகையில் லியோ திரைப்படம் வட இந்தியாவில் மட்டும் ரூ.30 கோடிக்கு மேலும் வசூலித்து உள்ளதாம். இது ஜெயிலர் பட வசூலை விட 6 மடங்கு அதிகமாகும். இதன்மூலம் பான் இந்தியா அளவில் வெற்றிப்படமாக லியோ மாறி உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் லலித் குமாரே சமீபத்திய பேட்டியில் கூறி இருக்கிறார். இதன்காரணமாக வருகிற நவம்பர் 1-ந் தேதி லியோ பட வெற்றிவிழாவை கொண்டாட படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.
இதையும் படியுங்கள்... கமல்ஹாசன் பர்த்டே ஸ்பெஷல்... 6 வருட காத்திருப்புக்கு பின் முதல் அப்டேட்டை வெளியிட்ட இந்தியன் 2 படக்குழு