கமல்ஹாசன் பர்த்டே ஸ்பெஷல்... 6 வருட காத்திருப்புக்கு பின் முதல் அப்டேட்டை வெளியிட்ட இந்தியன் 2 படக்குழு
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட்டை படக்குழு வெளியிட்டு உள்ளதால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
Indian 2
ஷங்கர் - கமல்ஹாசன் கூட்டணியில் வெளிவந்த மாஸ்டர் பீஸ் திரைப்படம் தான் இந்தியன். கடந்த 1996-ம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதோடு வசூலையும் வாரிக்குவித்தது. இப்படத்தில் நடிகர் கமல்ஹாசன் தந்தை, மகன் என இரட்டை வேடங்களில் நடித்து மாஸ் காட்டி இருந்தார். இதையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதாக கடந்த 2017-ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.
Kamalhaasan Indian 2
2017-ம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் பைனலின் போது இந்த அறிவிப்பு வந்தது. பின்னர் சில பிரச்சனை காரணமாக ஓராண்டு தள்ளிப்போன இப்படத்தின் ஷூட்டிங் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. அப்போது மேக்கப் செட் ஆகவில்லை எனக்கூறி சில மாற்றங்களை செய்தனர். இதையடுத்து சில மாதங்களுக்கு பின் தொடங்கிய அப்படத்தின் ஷூட்டிங் குஜராத்தில் நடத்தப்பட்டது.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Indian 2 update
அதன்பின்னர் கடந்த 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னையில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து ஷுட்டிங் நடத்தப்பட்டது. அப்போது எதிர்பாரா விதமாக கிரேன் சரிந்து விழுந்ததில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து நிறுத்தப்பட்ட இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் தொடங்க கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்கு மேல் ஆனது. இதற்கிடையே இப்படத்தை கைவிடும் நிலை வரை சென்றது.
Indian 2
இறுதியாக ரெட் ஜெயண்ட்ஸ் இப்படத்திற்குள் நுழைந்து அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்தி வைத்து, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கினர். சுமார் ஓராண்டு கடின உழைப்புக்கு பின்னர் வெற்றிகரமாக ஷூட்டிங்கை நிறைவு செய்து பின்னணி பணிகளை தொடங்கி உள்ள படக்குழு, தற்போது அதன் முதல் அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட்டு உள்ளனர்.
அதன்படி நடிகர் கமல்ஹாசனின் பிறந்தநாள் வருகிற நவம்பர் 7-ந் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், அதையொட்டி நவம்பர் 3-ந் தேதி இந்தியன் 2 படத்தின் இண்ட்ரோ கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிடப்படும் என அறிவித்துள்ளனர். படம் ஆரம்பிக்கப்பட்டு 6 ஆண்டுகளுக்கு பின் அப்டேட் வெளியாகி உள்ளதால் ரசிகர்கள் குஷியாகி உள்ளனர்.
இதையும் படியுங்கள்... 'அந்த’ நடிகை உடன் சிவகார்த்திகேயன் காதலா? எஸ்.கே பற்றி நடிகர் தனுஷ் சொன்ன கிசுகிசு வைரலாகிறது