- Home
- Gallery
- Google Pay ஜூன் 4க்கு பிறகு செயல்படாது.. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கூகுள்.. முழு விபரம் இதோ !!
Google Pay ஜூன் 4க்கு பிறகு செயல்படாது.. அதிர்ச்சி தகவலை வெளியிட்ட கூகுள்.. முழு விபரம் இதோ !!
கூகுள் பே ஜூன் 4க்கு பிறகு இயங்காது என்றும், அது எங்கு? யாருக்கு பொருந்தும்? அதற்கான விதிமுறைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
- FB
- TW
- Linkdin
Follow Us
)
Google Pay Service Closed
ஆன்லைன் பேமெண்ட்ட் தளமான கூகுள் பே செயலியை உலக அளவில் பலரும் பயன்படுத்தி வருகிறார்கள். உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளில் கூகுள் பே சேவையை ஜூன் 4ம் தேதி முதல் நிறுத்தப் போகிறது கூகுள்.இதன் பிறகு ஆப் மூலம் பணம் செலுத்த முடியாது.
Google Pay
கூகுளின் கூகுள் பே சேவையானது இந்தியா உட்பட பல நாடுகளில் ஆன்லைன் பேமெண்ட்டுகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. 2022 இல் கூகுள் வேலட் (Google Wallet) அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, ஜிபே (Gpay) பயனர்களின் எண்ணிக்கையில் விரைவான அதிகரிப்பு ஏற்பட்டது. ஆன்லைன் பரிவர்த்தனைகளுக்கான பயனர்களின் முதல் தேர்வாக இது மாறியது.
Google Pay Service
கூகுளின் இந்த முடிவு இந்தியப் பயனர்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. ஜூன் 4, 2024 முதல் அமெரிக்காவில் கூகுள் பே சேவையை கூகுள் நிறுத்தப் போகிறது. அதாவது கூகுள் பே தடை செய்யப் போவது இந்தியாவிலிருந்து அல்ல, அமெரிக்காவிலிருந்து. ஜூன் 4க்குப் பிறகு, கூகுள் பே ஆப்ஸ் இந்தியாவிலும் சிங்கப்பூரிலும் மட்டுமே வேலை செய்யும்.
Google Wallet
அதேசமயம் மற்ற நாடுகளில் அதன் சேவை முற்றிலும் நிறுத்தப்படும். நிறுவனத்தின் கூற்றுப்படி, அனைத்து பயனர்களும் Google Wallet க்கு மாற்றப்படுவார்கள். இந்த தேதிக்குப் பிறகு, Google Pay அமெரிக்காவில் முற்றிலும் பயனற்றதாகிவிடும். கூகுள் பே சேவை மூடப்பட்ட பிறகு, அமெரிக்கப் பயனர்களால் பணம் செலுத்தவோ பெறவோ முடியாது.
Google Pay Services In US
கூகுள் அனைத்து அமெரிக்க பயனர்களையும் கூகுள் வாலட்டுக்கு மாற்றுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. கூகுள் வாலட்டை விளம்பரப்படுத்தவே இந்நிறுவனம் இத்தகைய நடவடிக்கையை எடுத்துள்ளதாக நம்பப்படுகிறது. சுமார் 180 நாடுகளில் Gpay ஆனது Google Wallet ஆல் மாற்றப்பட்டுள்ளதாக நிறுவனம் தனது வலைப்பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளது.
ஆபிஸ் போக ஸ்கூட்டரை தேடுறீங்களா.. இதோ 120 கிமீ மைலேஜ் தரும் ஏதரின் சிறந்த ஸ்கூட்டர்..