Singer Suchitra : பிரபல பாடகி மற்றும் டப்பிங் கலைஞரான சுசித்ரா கடந்த சில நாள்களாக வெளியிடும் திடுக்கிடும் பதிவுகள் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகின்றது.

தமிழ் திரை உலகில் நல்ல பல பாடல்களை பாடி, டப்பிங் கலைஞராகவும் சிறந்து விளங்கி வரும் சுசித்ரா கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியிட்ட "சுச்சி லீக்ஸ்" என்ற விஷயத்தின் மூலம் பெரும் சர்ச்சைகளை சந்தித்தார். இந்நிலையில் கடந்து சில ஆண்டுகளாக பெரிய அளவில் சினிமா பக்கம் வராமல் இருந்த நடிகை சுசித்ரா தற்பொழுது வெளியிட்டு வரும் தகவல்கள் பெரும் சர்ச்சைகளாக வெடித்து வருகிறது. 

அதிலும் குறிப்பாக தனது முன்னாள் கணவர் கார்த்திக் குமார் ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்றும், அவரும் நடிகர் தனுஷ் அவர்களும் இணைந்து குடித்துவிட்டு ஒரே அறையில் இருப்பார்கள் என்று அவர் கூறிய விஷயங்கள் பெரும் சர்ச்சைகளாகி, அதற்கு கார்த்தி குமார் மற்றும் அவரது இரண்டாவது மனைவி ஆகியோர் பதிலடி கொடுத்தனர்.

நடிகை பவித்ரா விபத்தில் சாகவில்லை! தற்கொலைக்கும் முன் சக நடிகர் வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

இந்நிலையில் ஒரு தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில் "கார்த்திக் குமார் சிறுவயது முதலிலேயே ஓரினச்சேர்க்கையாளராக தான் இருந்து வந்தார். ஆனால் அன்றைய காலகட்டத்தில் அது நமது ஊரில் ஏற்றுக்கொள்ளப்படாமல் இருந்தது. அதற்காக அவருக்கு கட்டி வைக்கப்பட்ட பெண்ணாக தான் நான் இருந்தேன்".

"சமுதாயத்தில் அவர் மீது எந்த தவறும் வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் என்னை அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். கார்த்திக் குமார் மட்டும் இந்த காலகட்டத்தில் பிறந்திருந்தால் நிச்சயம் அவர் எதிர்காலத்தில் ஒரு ஆண் நண்பரை தான் மணந்திருப்பார்". 

"கோலிவுட் உலகில் உள்ள பொதுவான கலாச்சாரம், வெள்ளித்தட்டில் கொக்கைன் போன்ற போதை மருந்து பார்ட்டி நடைபெறுவது தான். இந்த பார்ட்டியில் சிம்பு, வெங்கட் பிரபு மற்றும் யுவன் ஷங்கர் ராஜா போன்ற பல பணக்கார வீட்டு பிள்ளைகள் கலந்து கொள்வார்கள். அவர்களுக்கு வேறு வேலை இருக்காது அதனால் இதைத்தான் முழுநேர வேலையாக செய்து வந்தார்கள்". 

"வெளியில் தன்னை நல்லவரை போல காட்டிக் கொள்ளும் விஜயின் வீட்டில் இதுபோல பல பார்ட்டிகளில் நடந்திருக்கிறது. திரிஷாவும் இந்த கேங்கில் ஒருவர்தான், தனது பணக்கார நண்பர்களுடன் பெட் கட்டி, விஜய் வீட்டின் முன் குடித்துவிட்டு அவர் நடனமாடியதும் உண்டு. இதையெல்லாம் யாராலும் எப்பொழுதும் மறக்கவே முடியாது." 

"நானும் அந்த காலகட்டத்தில் அவ்வப்போது புகைபிடிக்கும் பழக்கத்தை கொண்டவளாக இருந்தேன். ஆனால் நான் பேண்ட் சர்ட் அணிகிறேன் புகைபிடிக்கிறேன் என்பதற்காக அவர்களோடு இணைந்து போதைப் பொருள்களை நான் எப்பொழுதும் உட்கொண்டதில்லை. இதனாலேயே அவர்களுக்கு என் மேல் ஒரு வெறுப்பு இருந்தது" என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ரூ.3000 கோடிக்கு அதிபதியாக இருக்கும் நடிகருடன் டேட்டிங் செய்யும்... மணிரத்னம் பட ஹீரோயினா இது?