ஜப்பான் பட இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட இயக்குனர் சிறுத்தை சிவா, அஜித்துடன் மீண்டும் பணியாற்றுவது பற்றி கொடுத்த ரியாக்‌ஷன் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்தின் ஆஸ்தான இயக்குனர்கள் பட்டியலில் இருப்பவர் என்றால் அது சிவா தான். ஒளிப்பதிவாளராக பணியாற்றிய சிவா, சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படத்தை தொடர்ந்து அவர் அஜித்துடன் இணைந்த படம் தான் வீரம். இவர்கள் இருவரும் முதன்முதலில் இணைந்த படமே பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதோடு சிவாவின் பிலிம் மேக்கிங் ஸ்டைலும் அஜித்துக்கு பிடித்துப் போனதால் தன்னுடைய அடுத்த பட வாய்ப்பையும் வழங்கினார்.

அதன்படி அஜித்தும் சிவாவும், இரண்டாவது முறையாக இணைந்த படமான வேதாளம் பெரியளவில் ஹிட் ஆகவில்லை. ஆனால் அஜித் ரசிகர்களை திருப்திபடுத்தும் படமாக இது அமைந்தது. இதனால் தன்னுடைய விவேகம் படத்தை இயக்கும் வாய்ப்பையும் சிவாவுக்கு வழங்கினார் அஜித். அதுவரை இந்திய அளவில் கதைக்களம் அமைத்து வந்த சிவா, அஜித்தை வைத்து ஒரு ஹாலிவுட் ரேஞ்சுக்கு கதைக் களத்துடன் விவேகம் படத்தை இயக்கினார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

அப்படம் அட்டர் பிளாப் ஆனது. அதன்பின் சிவா உடன் அஜித் இணையவே மாட்டார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விசுவாசம் படம் மூலம் மீண்டும் இணைந்தனர். அப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு, அஜித் மற்றும் சிவா இருவருக்குமே கம்பேக் படமாக அமைந்தது. அதன்பின்னர் ஹெச்.வினோத் பக்கம் சாய்ந்த அஜித், அவருடன் நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு என வரிசையாக மூன்று படங்களில் நடித்தார்.

இதனிடையே விடாமுயற்சி படத்துக்கு பின்னர் அஜித்தும் சிவாவும் மீண்டும் இணைய உள்ளதாக பேச்சு அடிபட்ட நிலையில், இதுகுறித்து ஜப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள வந்த இயக்குனர் சிறுத்தை சிவாவிடமே கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்வியை கேட்டதும் அனைவரையும் பார்த்து கைகூப்பி கும்பிடுபோட்டு கிளம்பிவிட்டார் சிவா. இந்த வீடியோ இணையத்தில் செம்ம வைரல் ஆகி வருகிறது. அஜித்துடன் அப்படி என்ன பிரச்சனை என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... ஜெயிலர் படம் தர்ம அடி வாங்கிய இடத்தில்... அதைவிட 6 மடங்கு அதிக வசூலை வாரிக்குவித்து கெத்து காட்டிய லியோ