ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழா தற்போது நடந்துகொண்டிருக்கும் நிலையில், அதில் கலந்து கொண்டுள்ள பிரபலங்கள் மற்றும் ரசிகர்களின் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. புகைப்படங்களை பார்க்க
- Home
- Tamil Nadu News
- Tamil News Live Updates: ஜெயிலர் இசை வெளியீட்டு விழா; அதிரடி என்ட்ரி கொடுத்த ரஜினி!!
Tamil News Live Updates: ஜெயிலர் இசை வெளியீட்டு விழா; அதிரடி என்ட்ரி கொடுத்த ரஜினி!!

ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த், இயக்குனர் நெல்சன், அனிருத் கலந்து கொண்டனர்.
பிரமிக்க வைத்த 'ஜெயிலர்' ஆடியோ லான்ச் போட்டோஸ்! எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொண்டார்கள் தெரியுமா?
அண்ணாமலையை புகழ்ந்த ஆர்.பி. உதயகுமார்!!
இரும்பு மனிதர், கரும்பு மனிதராக வந்திருக்கிறார்.. அண்ணாமலையை புகழ்ந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!
சென்னையில் ஹாக்கி விளையாட்டரங்கம் திறப்பு!!
சென்னை.. 16 கோடியில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கம் - திறந்து வாய்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின்!
சென்னையில் ஹாக்கி விளையாட்டரங்கம் திறப்பு!!
சென்னை.. 16 கோடியில் மேம்படுத்தப்பட்ட ஹாக்கி விளையாட்டரங்கம் - திறந்து வாய்த்த தமிழக முதல்வர் ஸ்டாலின்!
ஜெயிலர் விழாவில் ரம்யா கிருஷ்ணன்!!
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகை ரம்யா கிருஷ்ணன்

நெல்சனை கட்டிப்பிடித்து அன்பை வெளிப்படுத்திய ரஜினிகாந்த்
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனர் நெல்சனை கட்டிப்பிடித்து தனது அன்பை பரிமாறிய ரஜினிகாந்த்
காவாலா பாட்டுக்கு நடனம் ஆடிய தமன்னா!!
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகை தமன்னா காவாலா பாட்டுக்கு நடனம் ஆடி அரங்கத்தையே அலற வைத்தார்.
ஜெயிலர் இசை விழாவில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார்
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் உடன் ரஜினிகாந்த்.
அனிருத்துக்கு முத்தமிட்ட ரஜினிகாந்த்!!
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் அனிருத்துக்கு முத்தமிட்ட ரஜினிகாந்த்
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினிகாந்த்!!
'ஜெயிலர்' ஆடியோ லான்ச்..! வெறித்தனமான பர்ஃபாம்மென்ஸுக்கு தயாரான தமன்னா - அனிரூத்! வைரலாகும் வீடியோ!
'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழாவில், பர்ஃபாம்மென்ஸ் செய்வதற்காக தமன்னா மற்றும் அனிருத் தயாராகி வரும் வீடியோவை, சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க
ராமேஸ்வரத்தில் ஹெச்.ராஜா பேச்சு!!
ராமேஸ்வரத்தில் இருந்து பாஜக தலைவர் அண்ணாமலை நடை பயணம் மேற்கொள்ள இருக்கிறார். நடைபயணத்தை இன்று மத்திய அமைச்சர் அமித் ஷா துவக்கி வைக்கிறார். இதற்கான விழாவில் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கலந்து கொண்டு பேசினார்.
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் அனிருத், நெல்சன்!!
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் அனிருத், நெல்சன் கலந்து கொண்டனர்

ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் தமன்னா!!
ஜெயிலர் படத்தில் இடம் பெற்று இருக்கும் காவாலா பாட்டுக்கு நடிகை தமன்னா நடனம் ஆடி கலக்கி இருந்தார். அதற்கு தகுந்தவாறு இன்றும் இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்று நடனம் ஆடினார்.

கலாநிதி மாறனுடன் ரஜினிகாந்த்!!
சன் பிக்சர்ஸ் உரிமையாளர் கலாநிதி மாறனின் கையை பிடித்தவாறு நடந்த வரும் ரஜினிகாந்த்
'ஜெயிலர்' ஆடியோ லான்ச்சில் மாஸ் என்ட்ரி கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்! வீடியோ
ஜெயிலர் பட ஆடியோ லாஞ்சுக்கு படுமாஸாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்ட்ரி கொடுத்த வீடியோ வைரலாகி வருகிறது. மேலும் படிக்க
ஜெயிலர் ஆடியோ லாஞ்ச்சில் மாஸ் ஆக நுழைந்த ரஜினிகாந்த்!!
ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தின் ஆடியோ லாஞ்ச்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' பட ஆடியோ லான்ச் பிரம்மாண்டமாக நடந்து வருகிறது!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், முதல் முறையாக இயக்குனர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள 'ஜெயிலர்' படத்தின் இசை வெளியீட்டு விழா, தற்போது சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், படு பிரமாண்டமாக துவங்கி நடந்து வருகிறது.
முதல்வர் எங்கே? எடப்பாடி பழனிச்சாமி எங்கே? கடலூரை அதிர வைத்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேச்சு !!
என்எல்சி இரண்டாவது சுரங்க விரிவாக்கத்திற்காக நிலத்தை கையகப்படுத்த கூடாது. எவ்வளவு விலை கொடுத்தாலும் இடங்களை விட்டுக் கொடுக்க முடியாது. என்எல்சி பிரச்சனைகடலூர் மாவட்ட பிரச்சினை இல்லை என்று கூறியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
செமிகண்டக்டர் உற்பத்தி நிறுவனங்களுக்கு 50 சதவீதம் நிதியுதவி: பிரதமர் மோடி!
செமிகண்டக்டர்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு 50 சதவீதம் நிதியுதவி அளிக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்