ராஜஸ்தான் காங்கிரஸ் அரசில் பூதாகரமாகியுள்ள சிவப்பு டைரி குறித்து பிரதமர் மோடி பேசியுள்ளார்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live Updates: மது விற்பனையை அதிகரிப்பது நோக்கமல்ல.. அமைச்சர் முத்துசாமி
Tamil News Live Updates: மது விற்பனையை அதிகரிப்பது நோக்கமல்ல.. அமைச்சர் முத்துசாமி

டாஸ்மாக்கால் எந்த தவறும் நடைபெற கூடாது என்பது தான் எங்களின் நோக்கம். மது விற்பனையை அதிகரிக்க வேண்டும் என்பது எங்களின் நோக்கம் இல்லை என அமைசச்ர் முத்துசாமி கூறியுள்ளார்.
காங்கிரஸ் ரகசியம் அடங்கியிருக்கும் ‘சிவப்பு டைரி’: பிரதமர் மோடி பேச்சு!
வந்தாரை வாழ வைக்குற ஊர் இது... உண்மை தெரியாம பேசிய பவன் கல்யாணுக்கு நாசர் கொடுத்த பளீச் ரிப்ளை
தமிழ் சினிமா முடிவுக்கு எதிராக தெலுங்கு நடிகர் பவன் கல்யாண் பேசியிருந்த நிலையில், நடிகர் நாசர் அதற்கு வீடியோ வாயிலாக ரிப்ளை செய்துள்ளார்.

மாநிலங்களவையில் நிறைவேறும் டெல்லி அவசரச் சட்டம்: ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆதரவு!
ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சி பாஜகவுக்கு ஆதரவளித்துள்ளதால், டெல்லி அவசரச் சட்டம் தொடர்பான மசோதா மாநிலங்களவையில் நிறைவேற வாய்ப்புள்ளது
எதிர்க்கட்சிகள் கறுப்பு உடை: மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சாடல்!
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கறுப்பு உடை அணிந்து எதிர்ப்பு தெரிவிப்பதை மத்திய அமைச்சரும், ராஜ்யசபா பாஜக தலைவருமான பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார்
பெண் அரசு ஊழியர்களுக்கு ஓராண்டு பேறுகால விடுப்பு
சிக்கிம் மாநில பெண் அரசு ஊழியர்களுக்கு ஓராண்டு பேறுகால விடுப்பு வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார்
ஞானவாபி மசூதி வழக்கு: அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று மீண்டும் விசாரணை!
ஞானவாபி மசூதியில் தொல்லியல் ஆய்வு தொடர்பான வழக்கை அலகாபாத் உயர் நீதிமன்றம் இன்று மீண்டும் விசாரிக்கவுள்ளது
ராஜஸ்தான் முதல்வருக்கு பிரதமர் அலுவலகம் பதிலடி!
பிரதமர் மோடி கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் தனது பெயர் நீக்கப்பட்ட விவகாரம் குறித்து ராஜஸ்தான் முதல்வர் ட்வீட்டுக்கு பிரதமர் அலுவலகம் பதிலடி கொடுத்துள்ளது
அரசியல் வேலைகளை பாதியில் நிறுத்திவிட்டு; திடீரென வெளிநாடு பறந்த விஜய் - பின்னணியில் இப்படி ஒரு மேட்டர் இருக்கா
அரசியல் பணிகளை பாதியில் நிறுத்திவிட்டு நடிகர் விஜய் திடீரென வெளிநாடு கிளம்பி சென்றதன் பின்னணியில் உள்ள ரகசியத் தகவலை பயில்வான் ரங்கநாதன் வெளியிட்டுள்ளார்.
எங்க மாமனாரும், மாமியாரும் வீட்ல இல்ல! வந்தா கணவனின் கதையை முடிச்சிடலாம்! நாடகமாடிய மனைவி! சிக்கியது எப்படி?
கணவனை தலையணையால் அழுத்திக் கொலை செய்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது போல நாடகமாடிய மனைவி, அவரது கள்ளக்காதலன் உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Today Gold Rate in Chennai : இன்றைக்கு தங்கம் வாங்க போறீங்களா.. அப்படின்னா விலையை கொஞ்சம் பார்த்துட்டு போங்க.!
தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.
செந்தில் பாலாஜி வழக்கு.. மீண்டும் இன்று விசாரணை
செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீடு மனு இன்று மதியம் 2 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வருகிறது. வாதங்களை நிறைவு செய்ய செந்தில் பாலாஜி தரப்புக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
ஆகஸ்ட் 1ம் தேதி வைகை, பல்லவன் உள்ளிட்ட முக்கிய ரயில்கள் ரத்து
தண்டவாளப் பராமரிப்புப் பணிகளின் காரணமாக இம்மாதம் 30ம் தேதி முதல் 1ம் தேதி வரை முக்கிய ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. தஞ்சை - சென்னை வழித்தடத்தில் இயக்கப்படும் 46 ரயில்களும், திருச்சி - தஞ்சை வழித்தடத்தில் 15 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய ஏரியாக்களில் இன்று 5 மணிநேரம் மின்தடை.!
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை எழும்பூர், ஐடி காரிடார், தாம்பரம், கிண்டி, ஆவடி, போரூர் உள்ளிட்ட பகுதியில் மின்தடை ஏற்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மோடி என்ற ஆரிய மாடலை வீழ்த்த போவது பெரியாரின் திராவிட மாடல் தான்.. தெறிக்க விட்ட ஆ.ராசா..!
முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னெடுத்திருக்கிற அரசியல் களம்தான் பிரதமர் மோடியை வீட்டுக்கு அனுப்பப் போகிறது என ஆ.ராசா பேசியுள்ளார்.
சென்னையில் 432வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் மாற்றமில்லை
சென்னையில் 432வது நாளாக பெட்ரோல் - டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 102.63க்கும், டீசல் - ரூ. 94.24க்கும் விற்பனை செய்யப்படுகிறது.