08:32 PM (IST) Oct 26

அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு போனஸ்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு!

அரசு பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 20 சதவீதம் போனஸ் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது

08:21 PM (IST) Oct 26

அக்டோபர் 31ஆம் தேதி கூடும் தமிழக அமைச்சரவை கூட்டம்!

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வருகிற 31ஆம் தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

08:01 PM (IST) Oct 26

கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த பாஜக வழக்கறிஞர்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி!

கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த வழக்கறிஞர் பாஜகவில் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்

07:45 PM (IST) Oct 26

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்

தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வருகிற 31ஆம் தேதி கூடுகிறது. முதலமைச்சர் மு க ஸ்டாலின் தலைமையில் வருகின்ற 31ஆம் தேதி மாலை 6.30 மணி அளவில் தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது

07:45 PM (IST) Oct 26

சென்னை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர்; முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு!

குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சென்னை வந்தடைந்தார். அவரை விமான நிலையத்துக்கு நேரடியாக சென்று முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்

06:56 PM (IST) Oct 26

தொழில்முனைவை ஊக்குவிக்கும் ஸ்வநிதி திட்டம்; ரூ.9,152 கோடி கடன் - பிரதமர் பாராட்டு!

அனைவரையும் உள்ளடக்கிய தொழில்முனைவை ஊக்குவிக்கும் பிரதமர் ஸ்வநிதி திட்டம் மூலம் இதுவரை ரூ.9,152 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது

06:25 PM (IST) Oct 26

விசா சேவைகள் மீண்டும் தொடக்கம்: இந்தியாவின் முடிவுக்கு கனடா வரவேற்பு!

நாட்டில் சில விசா சேவைகளை மீண்டும் தொடங்குவதற்கான இந்தியாவின் முடிவை கனடா வரவேற்றுள்ளது

05:54 PM (IST) Oct 26

மஹுவா மொய்த்ரா ஆஜராக நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு உத்தரவு!

திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா ஆஜராக நாடாளுமன்ற ஒழுங்கு நடவடிக்கைக் குழு உத்தரவிட்டுள்ளது

04:22 PM (IST) Oct 26

சூரரைப்போற்று படத்தை போல் செம்ம மாஸாக தயாராகும் ‘புறநானூறு’ - சூர்யாவுடன் நடிக்கும் பிரபலங்களின் பட்டியல் இதோ

சூரரைப்போற்று படத்தை தொடர்ந்து சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ள புதிய படத்துக்கு புறநானூறு என பெயரிடப்பட்டு உள்ளது.

04:16 PM (IST) Oct 26

ஆந்திராவில் நாயுடு; தெலங்கானாவில் பாஜக: பவன் கல்யாணின் பலே கணக்கு!

தெலங்கானாவில் பாஜகவுடன் பவன் கல்யாண் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

03:10 PM (IST) Oct 26

லியோ ரிலீசுக்கு பின் டில்லி, ரோலெக்ஸிடம் இருந்து லோகேஷுக்கு வந்த அழைப்பு... மீண்டும் இணையும் எல்சியு கூட்டணி

கார்த்தி நடித்துள்ள 25வது படமான ஜப்பான் இசை வெளியீட்டு விழாவில் சூர்யா மற்றும் லோகேஷ் கனகராஜ் கலந்துகொள்ள உள்ளனர்.

01:40 PM (IST) Oct 26

செந்தில் பாலாஜியின் சிறையில் என்ன செய்கிறார்? சிறைத்துறை டிஐஜி தகவல்!

செந்தில் பாலாஜி சிறையில் என்ன செய்கிறார் என்பது பற்றி சிறைத்துறை டிஐஜி தகவல் தெரிவித்துள்ளார்

12:37 PM (IST) Oct 26

விவாகரத்துக்கு பின் மீண்டும் மலர்ந்த காதல்... புரபோஸல் பண்ணிய காதலனுக்கு லிப்கிஸ் அடித்து ஓகே சொன்ன அமலா பால்

நடிகை அமலா பால் பிறந்தநாள் அன்று தனது காதலன் தனக்கு புரபோஸ் செய்த வீடியோவை வெளியிட்டு 2-வது திருமணம் குறித்து சூசகமாக அறிவித்துள்ளார்.

11:31 AM (IST) Oct 26

லியோ உடன் போட்டிபோட பயந்து ஓடிடிக்கு தாவிய புதுப்படங்கள்.. இந்த வாரம் மட்டும் இத்தனை படங்கள் ஓடிடியில் ரிலீஸா?

லியோ படம் திரையரங்குகளை ஆக்கிரமித்து உள்ளதால் இந்த வாரம் திரையரங்குகளை காட்டிலும் ஓடிடியில் ஏராளமான தமிழ் படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.

11:07 AM (IST) Oct 26

இதில் எந்த உளவுத்துறை தோல்வியும் இல்லை... அமைச்சர் ரகுபதி

சாலையில் நடந்து சென்ற அந்த நபர் பெட்ரோல் நிரப்பிய பாட்டிலை அங்கு வீசியுள்ளார். இதில் எந்த உளவுத்துறை தோல்வியும் இல்லை. ஆளுநர் உடன் நாங்கள் மோதல் போக்கை கடைபிடிக்கவில்லை. அவர் மாநில பாஜக தலைவர் போல குற்றச்சாட்டுகளை கூறும் போது, அதற்கு பதில் அளிக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். 

10:38 AM (IST) Oct 26

கோவையில் பாலஸ்தீன நாட்டின் கொடியை பறக்க விட்ட நபர்கள் மீது 3 3 பிரிவுகளில் வழக்கு

கோவை உக்கடம் பகுதியில் கடந்த 24ம் தேதி பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நடந்த ஆர்ப்பாட்டத்தில், மேம்பாலத்தின் மீது பாலஸ்தீன நாட்டின் கொடியை பறக்க விட்ட நபர்கள் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

10:29 AM (IST) Oct 26

பாட்டி வயதிலும் குறையாத பியூட்டியோடு 57-வது பிறந்தநாளை கொண்டாடிய நடிகை நதியா - வைரலாகும் வீடியோ

தமிழ் திரையுலகில் என்றென்றும் இளமையாக இருக்கும் நடிகை நதியாவின் 57-வது பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

10:06 AM (IST) Oct 26

தனியார் பள்ளி வேன் தீப்பிடித்து விபத்து

சிதம்பரம் அருகே தீத்தாம்பாளையம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த தனியார் பள்ளி வேன் தீப்பிடித்து விபத்துக்குள்ளானது. 

10:02 AM (IST) Oct 26

Today Gold Rate in Chennai : விடாமல் அடிச்சு தூக்கும் தங்கம் விலை.. அலறும் பொதுமக்கள்.!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

09:45 AM (IST) Oct 26

கோவில் நிதியின் சொந்தக்காரர் அந்த கோவிலின் கடவுளே! இது போன்ற குற்றத்தில் அரசே ஈடுபடுக்கூடாது! நாராயணன் திருப்பதி

கோவில்களின் நிதியை அந்தந்த கோவில்களின் மேம்பாட்டிற்காக தான் செலவிட வேண்டும் என்பது விதி என நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.