அக்டோபர் 31ஆம் தேதி கூடும் தமிழக அமைச்சரவை கூட்டம்!
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வருகிற 31ஆம் தேதி கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் வருகிற 31ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அக்டோபர் 31ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு அமைச்சரவை அறையில் முதலமைச்சர் தலைமையில் கூட்டம் நடைபெறும் எனவும், விவாதிக்கப்படும் பெருள்கள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக இயங்கி வருகிறது. ஆளுநர் மாளிகை மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட விவகாரத்தில், தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு தண்ணீர் தர மறுப்பு தெரிவித்து வருகிறது. நாடாளுமன்றத் தேர்தல் உள்ளிட்டவைகளும் எதிர்வரவுள்ள நிலையில், தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் கூடவுள்ளது.
இதில், மேற்கண்ட விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பெரிய நிறுவனங்கள் தொழில் தொடங்க ஒப்புதல் அளிப்பது உள்ளிட்டவைகள் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.
கருக்கா வினோத்தை ஜாமீனில் எடுத்த பாஜக வழக்கறிஞர்: சட்டத்துறை அமைச்சர் ரகுபதி!