- Home
- Gallery
- லியோ ரிலீசுக்கு பின் டில்லி, ரோலெக்ஸிடம் இருந்து லோகேஷுக்கு வந்த அழைப்பு... மீண்டும் இணையும் எல்சியு கூட்டணி
லியோ ரிலீசுக்கு பின் டில்லி, ரோலெக்ஸிடம் இருந்து லோகேஷுக்கு வந்த அழைப்பு... மீண்டும் இணையும் எல்சியு கூட்டணி
லியோ ரிலீசுக்கு பின்னர் கார்த்தியின் அழைப்பை ஏற்று சூர்யாவும், லோகேஷ் கனகராஜும் இணைந்து ஒரு விழாவில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Lokesh Kanagaraj, Suriya
தமிழ் சினிமாவில் டிரெண்டிங்கில் உள்ள இயக்குனர் என்றால் அது லோகேஷ் கனகராஜ் தான். அவர் இயக்கிய 5 படங்களுமே வசூலை வாரிக்குவித்துள்ளன. அதுவும் அண்மையில் அவர் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த லியோ திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் 500 கோடிக்கு மேல் வசூலித்து தொடர்ந்து வெற்றிநடைபோட்டு வருகிறது. லோகேஷ் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த படங்களில் அதிக வசூலை வாரிக்குவித்துள்ள படம் லியோ தான்.

suriya, karthi
லோகேஷ் கனகராஜின் படங்கள் ஹிட் ஆவதற்கு அவர் அறிமுகப்படுத்திய எல்.சி.யு கான்செப்ட்டும் ஒரு முக்கிய காரணம். கைதியில் தொடங்கி, விக்ரம், லியோ என தொடர்ந்து மூன்று படங்களை எல்சியுவில் கொண்டுவந்துவிட்டார் லோகேஷ். அவரது எல்சியு-வில் ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் கதாபாத்திரங்களில் ரோலெக்ஸ் மற்றும் டில்லி ஆகியவையும் ஒன்று. தற்போது ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை இயக்கி முடிக்க திட்டமிட்டுள்ள லோகேஷ், அதன்பின் மீண்டும் எல்சியு-விற்குள் செல்ல உள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
LCU director lokesh kanagaraj
ரஜினி படத்தை முடித்த கையோடு கார்த்தியை வைத்து கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார் லோகேஷ். அதன்பின்னர் ரோலெக்ஸ் கதாபாத்திரத்தை மையமாக வைத்து சூர்யா உடன் ஒரு முழுநீள படத்தில் பணியாற்ற இருக்கிறார். இந்த படங்கள் உருவாக இரண்டு ஆண்டுகள் ஆனாலும், அதற்கு முன்னரே லோகேஷ் கனகராஜ், தன்னுடைய பேவரைட் கதாபாத்திரங்களான ரோலெக்ஸ் மற்றும் டில்லி உடன் இணைய இருக்கிறார்.
director lokesh kanagaraj
நடிகர் கார்த்தியின் 25-வது படமான ஜப்பான், ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ளது. இப்படம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற அக்டோபர் 28-ந் தேதி சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. அந்த விழாவில் நடிகர் சூர்யா, மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தான் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்ள உள்ளார்களாம். இதனால் அன்றைய தினம் கைதி 2 மற்றும் ரோலெக்ஸ் ஆகிய படங்களைப் பற்றிய அப்டேட்டுகள் வெளியாகவும் வாய்ப்புள்ளது.
இதையும் படியுங்கள்... Leo: நேற்று அப்படி பேசிட்டு... அந்தர் பல்டி அடித்த மன்சூர் அலிகான்! படக்குழு பொத்தி வச்ச அந்த ரகசியத்தை லீக்!