தமிழ் திரையுலகில் என்றென்றும் இளமையாக இருக்கும் நடிகை நதியாவின் 57-வது பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் பகத் பாசிலின் தந்தை பாசில் இயக்கத்தில் கடந்த 1985-ம் ஆண்டு திரைக்கு வந்த பூவே பூச்சூடவா திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் ஹீரோயினாக அறிமுகமானவர் நதியா. 80களில் டாப் ஹீரோயினாக கொடிகட்டிப்பறந்த நதியா, தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். கிளாமராக நடிக்காததால் இவருக்கும் ஹோம்லி நடிகை என்கிற பெயரும் கிடைத்தது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

திருமணத்துக்கு பின் சினிமாவை விட்டு விலகிய நதியாவுக்கு இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். இதையடுத்து கடந்த 2004-ம் ஆண்டு வெளிவந்த எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படம் மூலம் கம்பேக் கொடுத்தார் நதியா, அப்படத்தில் ஜெயம் ரவியின் அம்மாவாக நதியா நடித்த கேரக்டர் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதைத்தொடர்ந்து சினிமாவில் முன்னணி ஹீரோக்களுக்கு அம்மாவாக நடித்து வருகிறார் நதியா. இவருக்கு தற்போது 57 வயது ஆனாலும் இன்னும் இளமை குறையாமல் இருக்கிறார். இந்த நிலையில் நடிகை நதியா கடந்த அக்டோபர் 24-ந் தேதி தன்னுடைய 57-வது பிறந்தநாளை தன்னுடைய தோழிகளுடன் வீட்டிலேயே சிம்பிளாக கொண்டாடி உள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் நதியா. இதைப்பார்த்த ரசிகர்கள் 57வயதிலும் எப்படி இவ்வளவு இளமையாக இருக்கிறீர்கள் என ஆச்சர்யத்துடன் கேட்டு வருகின்றனர். ஒரு சிலரோ அதற்குள் உங்களுக்கு 57 வயது ஆகிவிட்டதா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

Scroll to load tweet…

இதையும் படியுங்கள்... லியோ படத்தால் லாபமில்லை... விருப்பமே இல்லாம தான் திரையிட்டுள்ளோம் - திருப்பூர் சுப்ரமணியம் குற்றச்சாட்டு