லியோ படத்தால் லாபமில்லை... விருப்பமே இல்லாம தான் திரையிட்டுள்ளோம் - திருப்பூர் சுப்ரமணியம் குற்றச்சாட்டு
தமிழ்நாட்டில் லியோ படத்தை வெளியிட்ட திரையரங்குகளுக்கு அதனால் லாபமில்லை என திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
Leo vijay
நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி திரையரங்குகளில் சக்கைப்போடு போட்டு வரும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் கடந்த 19-ந் தேதி திரைக்கு வந்தது. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்திருந்தார். இப்படம் ரிலீஸுக்கு முன்னர் ஏராளமான சிக்கல்களை சந்தித்தது, அதில் ஒன்று தான் ஷேர் பிரச்சனை. லியோ படத்தை தமிழ்நாட்டில் விநியோகம் செய்தது செவன் ஸ்கிரீன் நிறுவனம் தான்.
Leo Profit share issue
அந்நிறுவனம் லியோ படத்துக்கு இதுவரை இல்லாத அளவு 80 சதவீத ஷேர் தொகை கேட்டதால் திரையரங்க உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சென்னையிலேயே பல்வேறு திரையரங்குகள் ரிலீசுக்கு முந்தைய நாள் வரை படத்தை வாங்காமல் இழுத்தடித்து வந்தன. பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி லியோ படத்தை தமிழகமெங்கும் சுமார் 850க்கும் மேற்பட்ட திரைகளில் திரையிட்டனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Tirupur Subramaniam
இந்த நிலையில், லியோ படத்தால் தியேட்டர்காரர்களுக்கு லாபமில்லை என திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது : “லியோ லாபகரமான படமாக எங்களுக்கு அமையவில்லை. என்ன காரணம் என்றால், இதுவரை தமிழ்நாட்டில் இல்லாத அளவு ஷேர் பங்கீடு வாங்கி உள்ளார்கள். பெரும்பாலான திரையரங்க உரிமையாளர்கள் இந்த படத்தை விருப்பப்பட்டு போடவில்லை.
LEO crew
அந்த அளவு அதிகமான ஷேர் கேட்டு எல்லா தியேட்டர்காரர்களையும் கசக்கிவிட்டார்கள். படம் வசூல் அதிகமா செஞ்சாலும் அதில் எங்களுக்கு பிரயோஜனம் இல்லை. இதனால் எங்களுக்கு நஷ்டமில்லை. அவங்க இவ்வளவு தொகை ஷேர் கேட்டால் மீத தொகை எங்களுடைய திரையரங்க பராமரிப்புக்கே பத்தாது. இதே படத்தை பக்கத்து மாநிலமான கேரளாவில் 60 சதவீத ஷேருடன் வெளியிட்டு இருக்கிறார்கள் எங்களிடம் 80 சதவீதம் வாங்கி இருக்கிறார்கள். இது என்ன நியாயம். இந்த படத்துடன் இன்னொரு படம் மட்டும் வந்திருந்தால், இப்போ கிடைத்துள்ள தியேட்டரில் பாதி கூட கிடச்சிருக்காது. வேறு படம் இல்லாததால் தான் இதை திரையிட வேண்டிய கட்டாயத்தில் திரையிட்டோம்” என அவர் கூறி உள்ளார்.
இதையும் படியுங்கள்... வெளிநாட்டு மியூசிக்கை திருடுறான்... இவன் இளையராஜாவும், ரஹ்மானும் கலந்த கலவையா? அனிருத்தை தாக்கிய ப்ளூ சட்டை