வெளிநாட்டு மியூசிக்கை திருடுறான்... இவன் இளையராஜாவும், ரஹ்மானும் கலந்த கலவையா? அனிருத்தை தாக்கிய ப்ளூ சட்டை
லியோ பட பாடலால் காப்பி சர்ச்சையில் சிக்கிய இசையமைப்பாளர் அனிருத்தை ப்ளூ சட்டை மாறன் எக்ஸ் தளத்தில் வெளுத்துவாங்கி இருக்கிறார்.
blue sattai maaran, anirudh
கோலிவுட்டில் மிகவும் பிசியான இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவர் கைவசம் அஜித்தின் விடாமுயற்சி, ரஜினியின் தலைவர் 170 மற்றும் 171, கமலின் இந்தியன் 2 என முன்னணி நடிகர்களின் படங்கள் குவிந்து வருகின்றன. அண்மையில் அனிருத் இசையமைப்பில் விஜய் நடித்த லியோ படம் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிநடை போட்டு வருகிறது. அப்படத்திற்காக அனிருத் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் வேறலெவல் ஹிட் அடித்துள்ளன.
blue sattai maaran, vijay
இந்த நிலையில், லியோ படத்துக்காக அவர் இசையமைத்த Ordinary person என்கிற ஆங்கிலப்பாடல் காப்பி சர்ச்சையில் சிக்கி உள்ளது. இது பல்கேரியா நாட்டை சேர்ந்த சுயாதீன இசைக்கலைஞரான ஓட்னிகா என்பவர் இசையமைத்த வேர் ஆர் யூ என்கிற ஆல்பம் பாடலின் அப்பட்டமான காப்பி என்று நெட்டிசன்கள் ஒப்பிட்டு வந்ததோடு, ஓட்னிகாவையும் இன்ஸ்டாகிராமில் டேக் செய்து, அனிருத் தங்கள் பாடலை திருடி விட்டதாக கூறி வந்தனர்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
Otnicka, Anirudh
இதைப்பார்த்து ஷாக் ஆன ஓட்னிகா, தனக்கு லியோ பாடலைப் பற்றி நூற்றுக்கணக்கான மெசேஜுகள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. இதைப்பற்றி ஆராய்ந்து வருவதாகவும், இதற்காக தங்களிடம் யாரும் உரிமை கோரவில்லை என்றும் அவர் கூறி இருந்தார். இந்த நிலையில், காப்பி சர்ச்சையில் சிக்கி இருக்கும் அனிருத், சர்ச்சைக்குரிய சினிமா விமர்சகரான ப்ளூ சட்டை மாறன் தன் பங்கிற்கு வெளுத்து வாங்கி இருக்கிறார்.
blue sattai maaran X post
இதுகுறித்து அவர் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது : “வெளிநாட்டு மியூசிக்கை திருடி தொடர்ந்து அசிங்கப்பட வேண்டியது. ஆனா பேரு மட்டும் Rock Star. Robbery Star னு மாத்திக்கலாம். இதெல்லாம் ஒரு பொழப்பு. கொஞ்சநாள் முன்னாடி ஒருத்தன் சொன்னான்... இவன் இளையராஜாவும், ரஹ்மானும் கலந்த கலவையாம். ப்ளடி” என சாடி உள்ளார். ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி அனிருத்தை பார்த்து அவர் இளையராஜாவும், ரஹ்மானும் கலந்து கலவை என்று கூறி இருந்ததை தான் ப்ளூ சட்டை மறைமுகமாக சாடி இருக்கிறார்.
இதையும் படியுங்கள்... நடிகர் விஜய் சேதுபதி - சசிகுமார் வெளியிட்ட “பிரம்ம முகூர்த்தம்” பட ஃபர்ஸ்ட் லுக் !!