சென்னை வந்தடைந்தார் குடியரசுத் தலைவர்; முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு!
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சென்னை வந்தடைந்தார். அவரை விமான நிலையத்துக்கு நேரடியாக சென்று முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்
குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இரண்டு நாட்கள் பயணமாக சென்னை வந்துள்ளார். பெங்களூருவில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த அவரை, விமான நிலையத்தில் முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ரவி ஆகியோர் நேரில் சென்று வரவேற்றனர்.
விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்ற குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, இன்று இரவு அங்கு தங்குகிறார். நாளை காலை முக்கிய பிரமுகர்கள் அவரை ஆளுநர் மாளிகையில் சந்திக்கவுள்ளனர்.
இதையடுத்து, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 8ஆவது பட்டமளிப்பு விழாவில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ளும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
என்சிஇஆர்டி பரிந்துரை: கேரள அரசு நிராகரிப்பு!
அதன் தொடர்ச்சியாக, பிற்பகல் 12.05 மணி அளவில் சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு மீண்டும் டெல்லி செல்லவுள்ளார்.