10:27 PM (IST) Mar 13

ஆபத்தான நாய் இனங்களுக்கு தடை: மத்திய அரசு அதிரடி!

ஆபத்தான நாய் இனங்கள் என கருதப்படும் 23 ஆக்ரோஷ தன்மை கொண்ட நாய்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது

08:25 PM (IST) Mar 13

இதுதான் சரத்குமார் தனது கட்சியை பாஜகவில் இணைத்ததற்கான காரணமா?

நடிகர் சரத்குமார் தனது கட்சியை பாஜகவுடன் இணைத்ததற்கு அவரது மகள் வரலட்சுமிதான் காரணமா என்ற பேச்சு அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது

07:36 PM (IST) Mar 13

ரூ.5 கொடுத்தாலும் அது உதவிதான்: குஷ்புவை சரமாரியாக தாக்கிய நடிகை அம்பிகா!

பாராட்ட மனமில்லை என்றால் எதுவும் கூறாமல் அமைதியாக இருங்கள் என பாஜக நிர்வாகி குஷ்புவை நடிகை அம்பிகா கடுமையாக விமர்சித்துள்ளார்

06:28 PM (IST) Mar 13

தேர்தல் பத்திர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!

எஸ்.பி.ஐ. வங்கி சமர்பித்த தேர்தல் பத்திர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்

06:01 PM (IST) Mar 13

செந்தில் பாலாஜிக்கு எதிரான விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான அமலாக்கத் துறை விசாரணைக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உத்தரவிட்டுள்ளது

05:41 PM (IST) Mar 13

குஷ்பு பேனரை செருப்பால் அடித்து, உருவ பொம்மை எரித்து திமுக மகளிரணி போராட்டம்!

திமுக மகளிர் அணியினர் குஷ்புவின் உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

05:17 PM (IST) Mar 13

உத்தரகாண்ட் பொது சிவில் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பொது சிவில் சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்

04:46 PM (IST) Mar 13

புதிய தேர்தல் ஆணையர்கள் தேர்வுக்கு எதிரான வழக்கு மார்ச் 15இல் விசாரணை: உச்ச நீதிமன்றம் அறிவிப்பு!

புதிய சட்டத்தின் மூலம் புதிய தேர்தல் ஆணையர்கள் தேர்வுக்கு எதிரான வழக்கு விசாரணை மார்ச் 15ஆம் தேதி நடைபெறும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது

04:33 PM (IST) Mar 13

மீண்டும் எம்.எல்.ஏ. ஆகிறார் பொன்முடி? விரைவில் அறிவிப்பு!

குற்றவாளி என்ற தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்டதால் முன்னாள் அமைச்சர் பொன்முடி மீண்டும் எம்.எல்.ஏ.வாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

04:14 PM (IST) Mar 13

பாகிஸ்தானில் கட்டு கட்டாக வீதியில் கிடந்த பணம்.. தவறாக அச்சிடப்பட்டதா.? வைரல் வீடியோ..

பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள நேஷனல் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் (NBP) கிளைக்கு, ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் (SBP) வழங்கிய ரூ.1000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் தவறாக அச்சிடப்பட்ட மூட்டைகள் சமீபத்தில் கிடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை உண்டாக்கி உள்ளது.

04:13 PM (IST) Mar 13

பொய்களின் குடோன் திமுக: நடிகை குஷ்பு காட்டம்!

திமுக பொய்களின் குடோனாக இருக்கிறது என நடிகையும், பாஜக நிர்வாகியுமான குஷ்பு காட்டம் தெரிவித்துள்ளார்

03:44 PM (IST) Mar 13

பொள்ளாச்சி பாலியல் குற்றாவாளிகள் தண்டிக்கப்படுவதற்கு முன் அடுத்த சம்பவம்: கொந்தளிப்பில் கொங்கு மண்டலம்!

பொள்ளாச்சி பாலியல் குற்றாவாளிகள் தண்டிக்கப்படாத நிலையில், கொங்கு மண்ணில் அடுத்த பாலியல் சம்பவம் அரங்கேறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

03:06 PM (IST) Mar 13

ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி: காங்கிரஸ் வாக்குறுதி!

ஆட்சிக்கு வந்தால் ஏழை பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ளது

02:02 PM (IST) Mar 13

1 மணி நேரம் இலவச உணவு.. ஒன்றுகூடிய கூட்டத்தால் தெருவுக்கு வந்த ஹோட்டல் உரிமையாளர் - வைரல் வீடியோ!

ஹைதராபாத்தில் 1 மணிநேரம் இலவசமாக ஹலீம் வழங்கும் ஹோட்டலில் கடும் குழப்பம் ஏற்பட்டது. கூட்டத்தை கலைக்க போலீசார் தடியடி நடத்தினர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

01:32 PM (IST) Mar 13

மஞ்சும்மல் பாய்ஸுக்கு சோலி முடிஞ்சது... ரெட் ஜெயண்ட் உதவியுடன் தமிழ்நாட்டில் ரிலீசாகும் மற்றுமொரு மலையாள படம்

மஞ்சும்மல் பாய்ஸ் படத்தின் வெற்றியை தொடர்ந்து கேரளாவில் மாஸ் ஹிட் அடித்த மற்றுமொரு மலையாள படமான பிரேமலு தற்போது தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆக உள்ளது.

01:12 PM (IST) Mar 13

பெங்களூர்: குண்டு வெடிப்பில் ஈடுபட்ட குற்றவாளி கைது.. அலேக்காக தூக்கிய தேசிய புலனாய்வு அமைப்பு..

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உணவகத்தில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலில் சந்தேகிக்கப்படும் நபரை கைது செய்தது தேசிய புலனாய்வு அமைப்பு.

12:33 PM (IST) Mar 13

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு சொத்து வரி விலக்கு.. தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு.. யாருக்கெல்லாம் பொருந்தும்?

நடப்பு நிதியாண்டில் இருந்து முன்னாள் ராணுவ வீரர்கள்சொத்து வரி மற்றும் வீட்டு வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இது முன்னாள் ராணுவ வீரர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.

12:30 PM (IST) Mar 13

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கு.. ஷபீர் என்பவர் கைது!

ராமேஸ்வரம் கஃபே குண்டுவெடிப்பு வழக்கில் சந்தேகத்துக்குரிய நபராக தேடப்பட்டு வந்த ஷபீர் என்பவரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது.

11:57 AM (IST) Mar 13

ரஜினி கிடையாது.. விஜய் கிடையாது.. ரூ.2200 கோடி ஹிட் கொடுத்த தமிழ் நடிகர் இவர்தான் தெரியுமா..

இந்த பான் இந்தியா நடிகர் இந்திய விமானப்படையில் பணிபுரிந்தார். அதுமட்டுமில்லாமல் ரூ 2200 கோடியில் படத்தையும் ஹிட் கொடுத்துள்ளார். அது சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தோ அல்லது தளபதி விஜயோ கிடையாது.

10:48 AM (IST) Mar 13

ஜாபர் சாதிக் கூட்டாளி சென்னையில் கைது.. போதைப்பொருள் கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்..

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஜாபர் சாதிக் கூட்டாளி சதா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.