ரூ.5 கொடுத்தாலும் அது உதவிதான்: குஷ்புவை சரமாரியாக தாக்கிய நடிகை அம்பிகா!
பாராட்ட மனமில்லை என்றால் எதுவும் கூறாமல் அமைதியாக இருங்கள் என பாஜக நிர்வாகி குஷ்புவை நடிகை அம்பிகா கடுமையாக விமர்சித்துள்ளார்
சென்னை செங்குன்றத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற குஷ்பு, தாய்மார்களுக்கு மாதம் ரூ.1000 பிச்சை போட்டால் ஓட்டுப்போட்டு விடுவார்களா என கேள்வி எழுப்பினார். பலராலும் போற்றப்படும் திமுக அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை இவ்வாறு விமர்சித்து பேசிய குஷ்புவின் கருத்துக்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
தேர்தல் பத்திர விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்: தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார்!
திமுகவினர் நடிகை குஷ்புவை சரமாரியாக தாக்கி பேசி வருகின்றனர். கலைஞர் உரிமை தொகை பெறும் மகளிர் பலரும் குஷ்புவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஆனால், தன்னுடைய சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்க குஷ்பு மறுப்பு தெரிவித்துள்ளார். பல்வேறு பிரச்சனைகளை திசை திருப்ப திமுகவினர் முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் தாம் தவறு செய்தால் காலில் விழுந்து கூட மன்னிப்பு கேட்பேன் பயந்து ஓட மாட்டேன் எனவும் அவர் தனது பேச்சுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
இந்த நிலையில், பாராட்ட மனமில்லை என்றால் எதுவும் கூறாமல் அமைதியாக இருங்கள் என பாஜக நிர்வாகி குஷ்புவை நடிகை அம்பிகா கடுமையாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து நடிகை அம்பிகா தனது எக்ஸ் பக்கத்தில், “யாராக இருந்தாலும் சரி, எந்த கட்சியாக இருந்தாலும் சரி, அவர்கள் உதவி செய்தாலோ அல்லது மக்களுக்கு ஆதரவாக இருந்தாலோ அதனை ஏற்றுக் கொண்டு பாராட்டுங்கள். பாராட்ட மனமில்லை என்றால் அமைதியாக இருங்கள். பிச்சை என அவமானப்படுத்தும் சொற்களை பயன்படுத்தாதீர்கள். 5 ரூபாய் கொடுத்தாலும் அது உதவிதான்.” என பதிவிட்டுள்ளார்.