MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Tamil Nadu News
  • Vijay - Ajith: முதல்வர் விஜய்க்கு அஜித் எழுதிய கடிதம்.. ஒரே பாராட்டு மழை! அப்படி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

Vijay - Ajith: முதல்வர் விஜய்க்கு அஜித் எழுதிய கடிதம்.. ஒரே பாராட்டு மழை! அப்படி என்ன சொல்லியிருக்கிறார் தெரியுமா?

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு நடிகரும் மோட்டார் ஸ்போர்ட்ஸ் வீரருமான அஜித்குமார் எழுதிய கடிதத்தில் நட்பு மற்றும் அன்பைவிட, மற்றொரு விஷயம் இடம் பெற்றுள்ளது. அதனை இருவரின் ரசிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு இணயத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

3 Min read
Author : Vedarethinam Ramalingam
Published : Sep 22 2026, 11:07 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
நல்ல நண்பர்கள் மீண்டும் சந்திக்கும் போது...!
Image Credit : X

நல்ல நண்பர்கள் மீண்டும் சந்திக்கும் போது...!

சினிமா திரையில் இருவரும் வேறு வேறு பாதையில் பயணித்தாலும், ரசிகர்களின் மனதில் இருவருக்கும் தனி இடம் உண்டு. போட்டி, வெற்றி, சாதனை என திரைத்துறையில் பல ஆண்டுகள் பயணித்த அஜித்தும் விஜய்யும், தனிப்பட்ட முறையில் ஒருவரை ஒருவர் மதித்து வரும் நட்சத்திரங்களாக பார்க்கப்படுகிறார்கள். காலம் மாறினாலும், ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் மாறினாலும், இருவரையும் சுற்றியுள்ள அந்த நட்பும் பரஸ்பர மரியாதையும் மட்டும் தொடர்ந்து பேசுபொருளாக இருந்து வருகிறது.

லண்டன் சென்ற முதல்வர் விஜய், கார் பந்தயத்தில் பங்கேற்ற விஜய்யை தேடிச்சென்று பாராட்டியதும் பச்சைக்கொடி அசைத்ததும் ரசிகர்களை குஷிப்படுத்தியது. இப்போது மீண்டும் அஜித்தின் பெயரும் விஜய்யின் பெயரும் ஒரே செய்தியில் இணைந்திருக்கிறது. இந்த முறை திரை சம்பந்தமான விஷயம் எதுவும் இல்லை. இருவருக்கும் இடையிலான அந்த பழைய நட்பையும் மரியாதையையும் நினைவுபடுத்தும் வகையில் வெளியாகியுள்ள தகவல், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அப்படி என்ன நடந்தது? எதற்காக அஜித் தனது கருத்தை பதிவு செய்தார்? இதுதான் தற்போது பலரது கேள்வியாக உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
சட்டசபையில் சொன்ன அந்த நல்ல விஷயம்
Image Credit : X

சட்டசபையில் சொன்ன அந்த நல்ல விஷயம்

தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கப்படும் என்ற அறிவிப்பு தற்போது கவனம் பெற்றுள்ளது. குறிப்பாக, கார் பந்தயத்தில் தொடர்ந்து ஆர்வம் காட்டி வரும் நடிகர் அஜித்குமார் இந்த அறிவிப்பை வரவேற்று பாராட்டு தெரிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் கூடுதல் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110-ன் கீழ் முதலமைச்சர் சி.ஜோசப் விஜய், சர்வதேச தரத்திலான மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கும் திட்டத்தை அறிவித்தார். சர்வதேச அளவிலான கார் பந்தயங்களை நடத்துவதற்கான வசதிகள், பயிற்சி கட்டமைப்புகள் மற்றும் இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவது இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

36
அஜித்தின் பார்வையில் ஏன் முக்கியம்?
Image Credit : our own

அஜித்தின் பார்வையில் ஏன் முக்கியம்?

இந்த நிலையில் இது தொடர்பாக அவர் முதல்வருக்கு எழுதிய கடிதம் கவனம் பெற்றுள்ளது. மோட்டார் ஸ்போர்ட்ஸ் மீது ஆர்வம் கொண்ட இளைஞர்கள் தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் இருப்பதாக அஜித் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். ஆனால், சர்வதேச தரத்தில் பயிற்சி பெறுவதற்கும் போட்டிகளில் பங்கேற்பதற்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் போதுமான அளவில் இல்லை என்பது அவரது கருத்தாக உள்ளது.

சில இளைஞர்கள் தனிப்பட்ட முறையில் வாகனங்களை வாங்கி சாலைகளிலேயே அதிவேகப் பயிற்சியில் ஈடுபடுவதால் விபத்துகளும் ஏற்படக்கூடிய சூழல் உள்ளது. அதற்கு பதிலாக, முறையான ரேஸ் டிராக் மற்றும் பாதுகாப்பான பயிற்சி வசதிகள் உருவாக்கப்பட்டால், ஆர்வமுள்ள இளைஞர்களை திறமையான பந்தய வீரர்களாக உருவாக்க முடியும் என்பதே இந்தக் கருத்தின் பின்னணி.

46
“மோட்டார் ஸ்போர்ட்ஸ் மட்டுமல்ல..”
Image Credit : our own

“மோட்டார் ஸ்போர்ட்ஸ் மட்டுமல்ல..”

அஜித்தின் பாராட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் மட்டும் இடம்பெறவில்லை. தமிழ்நாட்டில் அனைத்து விளையாட்டுகளுக்கும் தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து கல்வி மற்றும் பொருளாதாரத் துறைகளில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெற்றிருந்தாலும், விளையாட்டுத்துறையில் இன்னும் செய்ய வேண்டிய பணிகள் இருப்பதாக அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். விளையாட்டு மைதானங்கள், பயிற்சி மையங்கள், வீரர்களுக்கான தங்கும் வசதிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் மேம்பட்டால்தான் அதிகமான திறமைகளை உருவாக்க முடியும் என்பதும் அவரது பேச்சில் வலியுறுத்தப்பட்டது.

56
“சிறிய அடி.. மிகப்பெரிய பாய்ச்சல்”
Image Credit : X

“சிறிய அடி.. மிகப்பெரிய பாய்ச்சல்”

தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸ் சிட்டி அமைக்கும் திட்டத்தை அஜித் பாராட்டியுள்ளார். இந்திய மோட்டார் ஸ்போர்ட்ஸுக்கு இது ஒரு முக்கியமான முன்னேற்றமாக அமையும் என்ற நம்பிக்கையையும் அஜித் வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மோட்டார் ஸ்போர்ட்ஸ் மட்டுமின்றி தமிழ்நாடு அரசு மேற்கொள்ளும் பல்வேறு விளையாட்டு உள்கட்டமைப்பு முயற்சிகளும் வெற்றி பெற வேண்டும் என அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், முதலமைச்சர் விஜயின் இங்கிலாந்து பயணத்தின்போது சில்வர்ஸ்டோன் சர்க்யூட்டில் சர்வதேச மோட்டார் ஸ்போர்ட்ஸ் உள்கட்டமைப்புகளை நேரில் பார்வையிட்டார். அங்கு நடைபெற்ற 2026 Michelin Le Mans Cup பந்தயத்தையும் அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அஜித் குமார் அந்தப் போட்டியில் பங்கேற்றார்.

தமிழ்நாட்டின் வலுவான ஆட்டோமொபைல் மற்றும் மின்சார வாகன உற்பத்தி சூழலுடன் மோட்டார் ஸ்போர்ட்ஸை இணைத்து விளையாட்டு சுற்றுலா, வேலைவாய்ப்பு மற்றும் சர்வதேச போட்டிகளுக்கான வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கத்திலும் இந்தத் திட்டம் பார்க்கப்படுகிறது.

66
இளைஞர்களுக்கு புதிய வாய்ப்பு
Image Credit : Asianet News

இளைஞர்களுக்கு புதிய வாய்ப்பு

மொத்தத்தில், ஒரு நடிகர் மற்றும் பந்தய வீரராக அஜித்தின் அனுபவமும், அரசின் உள்கட்டமைப்பு திட்டமும் இணையும் இந்த முயற்சி நடைமுறைக்கு வரும் போது, தமிழ்நாட்டில் மோட்டார் ஸ்போர்ட்ஸை விரும்பும் இளைஞர்களுக்கு புதிய வாய்ப்புகள் உருவாகுமா என்பதே அடுத்தகட்ட எதிர்பார்ப்பாக உள்ளது.

About the Author

VR
Vedarethinam Ramalingam
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 17 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். சன் தொலைக்காட்சி, தந்தி டிவி பணியாற்றியுள்ள இவர், ஏசியாநெட் நியூஸ் தமிழில் இணைந்துள்ளார். வணிகம், முதலீடுகள் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர். எதிர்கால தேவைகளுக்குக்கு முதலீடு அவசியம் என்பதை அடித்தட்டு மக்களும் புரிந்துகொள்ளும் வகையில் எழுதி வருகிறார். இயற்கை விவசாயம் குறித்த படைப்புகளை படைப்பதிலும் கைதேர்ந்தவர்.
அஜித் கார் பந்தயம்
அஜித் குமார்
விஜய் (நடிகர்)
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
D-Mart-க்கு போறீங்களா? இந்த 5 பொருட்களை மட்டும் லிஸ்ட்டில் சேர்க்காதீங்க!
Recommended image2
Ration Card Cancellation: அக்டோபர் 1 முதல் லட்சக்கணக்கான ரேஷன் கார்டுகள் ரத்து.. உங்க கார்டு தப்புமா?
Recommended image3
Government Subsidy: ரூ.1,00,000 மானியம் தரும் தமிழக அரசு.! எதுக்கு தெரியுமா? யாருக்கெல்லாம் கிடைக்க போகுது தெரியுமா?
Related Stories
Recommended image1
CM Vijay : இங்கிலாந்து ட்ரிப் ஓவர்... முதல்வர் விஜய் ஈர்த்த முதலீடுகள் எவ்வளவு? எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்?
Recommended image2
Vijay-Ajith : அஜித்துக்கு பச்சைக் கொடி காட்டும் விஜய்! லண்டன் கார் ரேஸில் காத்திருக்கும் சம்பவம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved