ஆபத்தான நாய் இனங்களுக்கு தடை: மத்திய அரசு அதிரடி!

ஆபத்தான நாய் இனங்கள் என கருதப்படும் 23 ஆக்ரோஷ தன்மை கொண்ட நாய்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது

Dangerous dog breeds banned by the government in India check list here smp

சமீபகாலமாக அதிகரித்து வரும் நாய்கள் தாக்குதல் சம்பவங்களை கருத்தில் கொண்டு, இந்தியாவில் ஆபத்தானதாகக் கருதப்படும் சில நாய் இனங்களின் இறக்குமதி, விற்பனை மற்றும் இனப்பெருக்கத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அத்தகைய நாய் இனங்களை தடை செய்யுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கடிதம் எழுதியுள்ளது.

பிட்புல், ராட்வெய்லர், டெரியர், மாஸ்டிஃப்ஸ், மற்றும் அவற்றின் கலப்பினங்களுக்கும் இந்த தடை செய்யப்பட்ட இனங்களில் அடங்கும். இந்த நாய் இனங்கள் ஆபத்தானவை மட்டுமல்ல, அவற்றின் தாக்குதல்களுக்கு உள்ளாகும் மனிதர்கள் உயிரிழக்கவும் நேரிடலாம்.

இதுகுறித்து மத்திய கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில், பட்டியலில் உள்ள தடைசெய்யப்பட்ட நாய்களில் இறக்குமதி, விற்பனை மற்றும் இனப்பெருக்கத்திற்கு அனுமதி வழங்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தடை செய்யப்பட்ட நாய்களை ஏற்கனவே வைத்திருக்கும் நபர்கள், அவற்றின் இனப்பெருக்கத்தை தடுக்க அவற்றுக்கு கருத்தடை செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்பட்ட ஆபத்தான நாய் இனங்களின் பட்டியல்


1. பிட்புல் டெரியர்
2. தோசா இனு
3. அமெரிக்கன் ஸ்டாஃபோர்ட்ஷையர் டெரியர்
4. ஃபிலா பிரேசிலிரோ
5. டோகோ அர்ஜென்டினோ
6. அமெரிக்கன் புல்டாக்
7. போஸ்போல்
8. கங்கல்
9. மத்திய ஆசிய ஷெப்பர்ட் நாய்
10. காகசியன் ஷெப்பர்ட் நாய்
11. தென் ரஷ்ய ஷெப்பர்ட் நாய்
12. டோர்ன்ஜாக், சர்ப்லானினாக்
13. ஜப்பானிய தோசா மற்றும் அகிதா
14. மாஸ்டிஃப்ஸ்
15. ராட்வெய்லர்
16. டெரியர்கள்
17. ரோடீசியன் ரிட்ஜ்பேக்
18. உல்ஃப் நாய்கள்
19. கனாரியோ
20. அக்பாஷ்
21. மாஸ்கோ காவலர்
22. கேன் கோர்சோ
23. பந்தோக் ஆகிய வெளிநாட்டு நாய் இனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதுதான் சரத்குமார் தனது கட்சியை பாஜகவில் இணைத்ததற்கான காரணமா?

டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு பதிலளிக்கும் விதமாக நிபுணர்கள் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் அடங்கிய  குழு, தங்களது அறிக்கையை சமர்ப்பித்ததை அடுத்து மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios