புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தைக்கு வந்துள்ளது. பார்ப்பதற்கு எளிமையாக இருக்கும் ஸ்கூட்டர் பல்வேறு வசதிகளுடன் வருகிறது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
- Home
- Tamil Nadu News
- Tamil News Live Updates: சென்னை, திருவள்ளூர் : நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!
Tamil News Live Updates: சென்னை, திருவள்ளூர் : நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

மிக்ஜாம் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது சென்னையை அடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
பாஸ்ட் சார்ஜிங்.. குடும்பத்தோடு பயணிக்க ஏற்ற எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. விலை ரொம்ப கம்மிதான்..
மிக்ஜாம் புயலால் பொதுமக்கள் மிகவும் பாதிப்பு.. தனது ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த நடிகர் விஜய்..
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அரசுடன் இணைந்து உதவிகளைச் செய்யுமாறு நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
மண் மட்டும் தான் காலநிலை சூப்பர் ஸ்டார்.. COP28 துபாய் மாநாட்டில் சத்குரு பேச்சு..!
"இன்று நாம் எந்த வளத்தை உட்கொண்டாலும், எதை உருவாக்குகிறோமோ அது அடிப்படையில் மண்தான். எனவே மண் என்பது விவசாயிகளின் தொழில் மட்டுமல்ல, அது அனைவரின் தொழிலாகவும் இருக்க வேண்டும், ஏனென்றால் நாமும் மண்தான்” என்று சத்குரு கூறியுள்ளார்.
புதிய அணி.. களத்தில் இறக்கிய முதல்வர் மு.க ஸ்டாலின்.. படுவேகமாக நடக்கும் வெள்ள நிவாரணப் பணிகள் !!
மிக்ஜாம் புயல் தாக்கத்தால் ஏற்பட்ட பெருமழை பாதிப்பு காரணமாக, சென்னை நகரில் நிவாரண பணிகளை மேற்கொள்வதற்கு அமைச்சர்களை நியமித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணையிட்டுள்ளார்.
இனி ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வங்கிகளுக்கு விடுமுறையா? மத்திய அரசு அதிரடி !!
இனி ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும்வங்கிகள் மூடப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில் நிதி அமைச்சகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இலவச குடிநீருக்கு 1916!
சென்னையில் இலவச குடிநீர் பெற 1916 என்ற எண்ணில் அழைக்கலாம். 044-45674567 என்ற மாற்று எண்ணிலும் அழைத்து குடிநீர் தேவை குறித்துத் தெரிவிக்கலாம். தேவையான இடத்திற்கு லாரிகளில் குடிநீர் வாரியம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மிக்ஜாம் புயல் எதிரொலி: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..
மிக்ஜாம்புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் ஜாலியாக ரைடு போகலாம்.. எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை எவ்வளவு?
புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரைத் தேடுகிறீர்களா? ஆனால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி. கண்ணைக் கவரும் சில அம்சங்களையும் கொண்டுள்ளது. விலையும் கட்டுப்படியாகும்.
இந்திய விமானப்படையில் வேலை.. ரூ. 1.7 லட்சம் வரை சம்பளம்.. அருமையான வேலைவாய்ப்பு.!!
IAF AFCAT பணிக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இந்திய விமானப்படையில் (IAF) அதிகாரி வேலைகளை (Air Force Job Bharati) தேடும் இளைஞர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு ஆகும்.
ஆவின் பால் முதல் வாட்ஸ்அப் எண்கள் வரை.. மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளை முடுக்கிவிட்ட தமிழக அரசு..!
நாளை முதல் ஆவின் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது என்று பால்வளத் துறை அமைச்சர்மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
உங்கள் அக்கவுண்ட்டில் ஜீரோ பேலன்ஸ் இருந்தாலும்.. ரூ.10,000 எடுக்கலாம்.. எப்படி தெரியுமா?
வங்கியில் பணம் எடுப்பதற்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளது. உங்கள் சேமிப்புக் கணக்கில் ஜீரோ பேலன்ஸ் இருந்தாலும் ரூ.10,000 எடுக்கலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவை தவறான வழியில் பார்க்கும் உணர்வு: செந்தில்குமார் எம்.பி.யை விளாசிய அண்ணாமலை!
இந்தியாவை தவறான வழியில் பார்க்கும் ஆழமான உணர்வே திமுக எம்.பி பேசிய வார்த்தைகள் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சாடியுள்ளார்
மிக்ஜாம் புயல் மீட்பு பணி: தமிழக அரசுடன் கைகோர்க்க வாட்ஸ் அப் எண்கள் அறிவிப்பு!
மிக்ஜாம் புயல் மீட்பு பணிகளில் தமிழக அரசுடன் இணைந்து பணியாற்ற வாட்ஸ் அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன
சென்னை வெள்ள பாதிப்பு.. நிவாரணப் பணிகளில் ஈடுபட விருப்பம் இருக்கா.? தமிழக அரசு கொடுத்த வாய்ப்பு.!
மிக்ஜாம் புயல், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு உதவிடும் பணியில் தனிநபர் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள தமிழ்நாடு அரசின் வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளத்தால் தத்தளிக்கும் சென்னை... ‘தாராள பிரபு’ வாக மாறி நிவாரண நிதியை வாரி வழங்கிய ஹரிஷ் கல்யாண்
சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக பார்க்கிங் பட நாயகன் ஹரிஷ் கல்யாண் நிவாரண நிதி வழங்கி இருக்கிறார்.
சென்னையில் ஆவின் பால் தட்டுப்பாடு!
Michung cyclone மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கொட்டித் தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகள் மழைநீரில் மூழ்கின. இதனால் பல்வேறு பகுதிகளில் Aavin Milk பால்விநியோகம் செய்யப்படாத நிலையில், 3வது நாளாக இன்று வந்த பால் வண்டியை முற்றுகையிட்டு மக்கள் முண்டியடித்துக்கொண்டனர்.
Thirumavalavan | வேளச்சேரியில் 50 அடி பள்ளத்தில் "ஊசலாடும்" 2 உயிர்! - திருமாவை பார்த்ததுமே கதறிய உறவுகள்
சென்னை வேளச்சேரி பகுதியில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும்பணி தொடர்ந்து நடந்து வருகிறது.. பள்ளத்தில் சிக்கியிருக்கும் 2 ஊழியர்களை மீட்கும் முயற்சியும் விடாமல் நடந்து கொண்டிருக்கிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், செய்யூர் எம்எல்ஏ பனையூர் பாபு ஆகியோருடன் சம்பவ இடத்தை பார்வையிட வந்தார்.அப்போது, திருமாவை பார்த்ததுமே, பள்ளத்தில் சிக்கியிருப்பவர்களின் உறவினர்கள் கதறி கதறி அழுதார்கள்.. இதனால் நிலைகுலைந்து போன திருமாவளவன், அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்.. சிக்கியவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என்று உறவினர்கள் திருமாவளவனிடம் கோரிக்கை வைத்தனர்.
மிக்ஜாம் புயலால் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல்!
மிக்ஜாம் புயலால் உயிரிழந்தோருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்
சென்னையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி, நாளை (7.12.2023) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.
10 வருஷமா இதேநிலை தான்... அலட்சியம்; தவறான நிர்வாகம்; பேராசையே வெள்ளத்துக்கு காரணம் - சந்தோஷ் நாராயணன் ஆதங்கம்
அலட்சியம், தவறான நிர்வாகம் மற்றும் பேராசையாலே சென்னையில் இப்படி பெருவெள்ளம் ஏற்பட்டு உள்ளதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் சாடி உள்ளார்.