ஆவின் பால் முதல் வாட்ஸ்அப் எண்கள் வரை.. மிக்ஜாம் புயல் நிவாரண பணிகளை முடுக்கிவிட்ட தமிழக அரசு..!
நாளை முதல் ஆவின் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது என்று பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் டிச. 3, 4 ஆம் தேதிகளில் பெய்த தொடர் கனமழை, பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் இன்னும் தண்ணீர் தேங்கியுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கடந்த இரு தினங்களாக பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காமல் மக்கள் சிரமத்திற்கு ஆளாகினர். சில பகுதிகளில் இன்னும் மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் கிடைக்காத நிலை உள்ளது. இந்நிலையில் பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில், 'இன்றைய தினம் நிலைமை நன்கு சீரடைந்து விட்டது. நாளை முதல் பால் விநியோகத்தில் எந்த தடங்கலும் இருக்காது.
குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா
எனவே, #NoPanicBuying - பொதுமக்கள் பதட்ட மனநிலையில் அதிக அளவில் பால் வாங்கி இருப்பு வைப்பதை தவிர்க்க வேண்டும். அதுவே, பால் தேவைப்படும் பிறருக்கும் பால் கிடைக்க வழிவகுக்கும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவிடும் பணியில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள அரசின் வாட்ஸ்அப் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பால், குடிநீரை கூடுதல் விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா எச்சரித்துள்ளார். சென்னை அடையார் ஆற்றில் 37, 000 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருப்பதால், தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
அப்போது பேசிய அவர், “மிக்ஜாம்’ புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் படகுகள் மூலம் உணவு வழங்கப்படுகிறது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் அளவு குறைக்கப்பட்டுள்ளது. துப்புரவு பணிகளில் பிற மாவட்டங்களில் இருந்து வந்த பணியாளர்கள் ஈடுபடுகின்றனர். ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு விநியோகம் செய்யப்படுகிறது. சென்னையில் 4% பகுதிகளில் மின்விநியோகம் வழங்கப்படவில்லை.
அடையாற்றில் 37, 000 கன அடி தண்ணீர் சென்று கொண்டிருப்பதால், தண்ணீர் வடிவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக 5 லட்சம் லிட்டர் பால் வழங்கப்படாமல் உள்ளது. உயிரிழப்புகளை தடுக்கவே மின் இணைப்பு வழங்கப்படவில்லை. குடிநீர் விநியோகம் செய்பவர்கள் பதுக்கி வைக்கவோ, அதிக விலைக்கு விற்கவோ கூடாது. பால், காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.