04:34 PM (IST) Jan 04

நீதிமன்றத்துக்குள் நீதிபதி மீது பாய்ந்து தாக்கிய நபர்: வைரல் வீடியோ!

அமெரிக்க நீதிமன்றத்துக்குள் வழக்கு விசாரணையின்போது, நீதிபதி மீது பாய்ந்த ஒருவர் அவரை தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது

03:47 PM (IST) Jan 04

விஜய் மீது செருப்பு வீச்சு... உடனடியா ஆக்‌ஷன் எடுங்க - கோயம்பேடு காவல்நிலையத்துக்கு பறந்த புகார்

விஜயகாந்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்தபோது விஜய் மீது செருப்பு வீசியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

03:36 PM (IST) Jan 04

பொங்கல் பண்டிகை 2024: மதுரை ஜல்லிக்கட்டு தேதிகள் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன

03:16 PM (IST) Jan 04

அரசு போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுக: சீமான் வலியுறுத்தல்!

அரசு போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்

02:51 PM (IST) Jan 04

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 14ஆவது முறையாக மீண்டும் நீட்டிப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 14ஆவது முறையாக மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது

02:17 PM (IST) Jan 04

ராமர் அசைவம் உண்பவர்: தேசியவாத காங்கிரஸ் தலைவர் கருத்தால் சர்ச்சை!

கடவுள் ராமர் அசைவம் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் ஒருவர் கூறிய கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன

02:11 PM (IST) Jan 04

Video: துபாயிலும் விடாமல் துரத்தி வீடியோ எடுத்த ரசிகர்கள்.. கோபத்தில் டக்குனு போனை பிடுங்கி டெலிட் செய்த அஜித்

துபாயில் குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நடிகர் அஜித், தன்னுடைய ரசிகரின் போனை பிடுங்கி வீடியோவை டெலிட் செய்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

01:04 PM (IST) Jan 04

மாயாண்டி குடும்பத்தார் படத்தின் 2-ம் பாகம் குறித்து வெளிவந்த அறிவிப்பு

ராசு மதுரவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன திரைப்படம் மாயாண்டி குடும்பத்தார், அப்படத்தின் 2-ம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

01:02 PM (IST) Jan 04

ராகுலின் பாரத் நியாய யாத்திரை; மக்களவை தேர்தல் 2024: விவாதிக்கும் காங்கிரஸ்!

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில பொறுப்பாளர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது

12:35 PM (IST) Jan 04

விசாரணை என்ற சாக்கில் கைது செய்ய பாஜக திட்டம்: அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்க குற்றச்சாட்டு!

விசாரணை என்ற சாக்கில் தன்னை கைது செய்ய பாஜக திட்டமிடுவதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்

12:25 PM (IST) Jan 04

மனசாட்சி இல்லாமல் பேசுறீங்க! பிரதமர் மோடியின் பாசாங்கு பேச்சுக்கு தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள்! கே.எஸ்.அழகிரி

பிரதமர் மோடி தமது சாதுரியமான மேடைப் பேச்சின் மூலம் மக்கள் எதிர்கொண்டு வரும் துன்பங்களையும், துயரங்களையும் திசைத் திருப்பி அரசியல் ஆதாயம் தேடி விடலாம் என்று பகல் கனவு காண்கிறார் என கே.எஸ்.அழகிரி விமர்சனம் செய்துள்ளார். 

11:55 AM (IST) Jan 04

நாட்டின் மிகப்பெரிய மதசார்பற்ற கட்சி காங்கிரஸ்: ஒய்.எஸ்.ஷர்மிளா புகழாரம்!

நாட்டின் மிகப்பெரிய மதசார்பற்ற கட்சியாக காங்கிரஸ் இன்னும் இருக்கிறது என ஒய்.எஸ்.ஷர்மிளா புகழாரம் சூட்டியுள்ளார்

11:35 AM (IST) Jan 04

நெருங்கும் பொங்கல் பண்டிகை.! இந்த மாதத்திற்கான மகளிர் உரிமைத்தொகை எப்போது கிடைக்கும் தெரியுமா?

கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 13ம் தேதியே பயனாளிகளின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்பட திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

11:31 AM (IST) Jan 04

கேப்டன் மில்லர் பட விழாவில் பாலியல் சீண்டல்... தனுஷ் ரசிகரை ஓட ஓட விரட்டி தர்ம அடி கொடுத்த நடிகை- வீடியோ இதோ

கேப்டன் மில்லர் பட விழாவில் தன்னிடம் அத்துமீறி நடந்துகொண்ட தனுஷ் ரசிகரை ஐஸ்வர்யா ரகுபதி ஓட ஓட விரட்டி அடித்த வீடியோ வைரலாகி வருகிறது.

11:15 AM (IST) Jan 04

காங்கிரஸில் இன்று இணையும் ஆந்திர முதல்வரின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா!

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா காங்கிரஸ் கட்சியில் இன்று இணையவுள்ளார்

10:41 AM (IST) Jan 04

ராமர் கோயில் கட்டும்போது இதுதான் மிகப்பெரிய சவாலாக இருந்தது: நிருபேந்திர மிஸ்ரா தகவல்!

ராமர் கோயில் கட்டும்போது எந்த விஷயம் மிகப்பெரிய சவாலாக இருந்தது என கட்டுமான குழுவின் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா தகவல் தெரிவித்துள்ளார்

10:28 AM (IST) Jan 04

தலித் விவசாயிகளுக்கு எதிரான வழக்கை முடித்து வைக்கும் அமலாக்கத்துறை!

தலித் சமூகத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு எதிரான வழக்கை அமலாக்கத்துறை முடித்து வைக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

10:25 AM (IST) Jan 04

Today Gold Rate in Chennai : மீண்டும் எகிறியதா தங்கம் விலை? இன்று உயர்ந்ததா? குறைந்ததா? இதோ நிலவரம்.!

தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஏற்றம், இறக்கம் கண்டு வந்த நிலையில் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை காணலாம்.

10:25 AM (IST) Jan 04

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் இன்று 5 மணிநேரம் நடை அடைப்பு! தீர்த்த கிணறுகளில் நீராட தடை! என்ன காரணம்?

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் இன்று காலை 7 முதல் 12 மணி வரை நடை அடைக்கப்படும் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

10:11 AM (IST) Jan 04

கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் - சிஎம்டிஏ நிதி ஒதுக்கீடு

கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க சிஎம்டிஏ சார்பில் முதற்கட்டமாக ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.