ராகுலின் பாரத் நியாய யாத்திரை; மக்களவை தேர்தல் 2024: விவாதிக்கும் காங்கிரஸ்!

டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில பொறுப்பாளர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது

Congress holds a meeting to discuss Bharat Nyay Yatra preparations for loksabha elections smp

மணிப்பூரில் இருந்து மும்பை வரையிலான பாரத் நியாய யாத்ரா எனும் பெயரில் ராகுல் காந்தியின் அடுத்த நடைபயணம் தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை ‘பாரத் ஜோடோ யாத்ரா’ (இந்திய ஒற்றுமை பயணம்) என்ற பெயரில் ராகுல் காந்தியின் நடைபயணம் காங்கிரஸ் கட்சிக்கு வலு சேர்த்த நிலையில், பாரத் நியாய யாத்ரா நடைபயணமானது ஜனவரி 14ஆம் தேதி தொடங்கி மார்ச் 20ஆம் தேதி நிறைவடைகிறது.

சுமார் 6,200 கிமீ கொண்ட இந்த யாத்திரையானது, அசாம், மேற்கு வங்கம், பீகார், சத்தீஸ்கர், உத்தரபிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட 14 மாநிலங்களில் உள்ள 85 மாவட்டங்களைக் கடந்து மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் நிறைவடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநில பொறுப்பாளர்கள், மாநில தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், ராகுல் காந்தியின் பாரத் நியாய யாத்ராவுக்கான ஏற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.

 

 

பாரத் நியாய யாத்திரையின் வழியை இறுதி செய்வது மட்டுமல்லாமல் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கட்சியின் மூத்த நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து காங்கிரஸ் கட்சி அதன் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று முக்கிய கூட்டம் நடைபெறுவதாகவும், மாநில பொறுப்பாளர்கள், மாநில தலைவர்கள், பொதுச்செயலாளர்கள் இதில்  கலந்து கொண்டுள்ளதாகவும் பதிவிட்டுள்ளது.

விசாரணை என்ற சாக்கில் கைது செய்ய பாஜக திட்டம்: அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்க குற்றச்சாட்டு!

ராகுலின் பாரத் நியாய யாத்திரையால் வடகிழக்கு மக்கள் மிகவும் உற்சாகமாக இருப்பதாக அசாமில் உள்ள கலியாபோர் தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யும், மக்களவையில் அக்கட்சியின் துணைத் தலைவருமான கௌரவ் கோகோய் கூறியுள்ளார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios