07:52 PM (IST) Sep 02

19 வயதில்... 25 வயது நடிகை ஆண்ட்ரியாவுடன் காதல்! பிரேக்கப் பண்ண என்ன காரணம்? ரகசியத்தை உடைத்த அனிருத்!

நடிகை ஆண்ட்ரியா உடன் பிரேக்கப் செய்ய என்ன காரணம்? என்பது குறித்து பல வருடங்களுக்கு பின்னர் முதல் முறையாக ஓப்பனாக பேசி உள்ளார், இசை அமைப்பாளர் அனிருத். மேலும் படிக்க 

04:09 PM (IST) Sep 02

சீமானை விட ஒன்றல்ல 30 சதவீதம் அதிக வாக்குகள் பெறுவோம் - அண்ணாமலை

சீமானை விட ஒரு சதவீதம் அல்ல, 30 சதவீதம் அதிக வாக்குகள் பெறுவோம் என்று தெரிவித்துள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, சீமானை யாரும் சேர்த்துக் கொள்ள தயாராக இல்லாததால் அவர் தனித்து நிற்பதாக விமர்சித்துள்ளார்.

02:48 PM (IST) Sep 02

எல்லாம் ஓரம்போ.. கூகுள் நிரந்தரம்.. அலப்பறை கிளப்பும் பிக்சல் 8 & பிக்சல் 8 ப்ரோ - என்ன ஸ்பெஷல்.?

கூகுள்பிக்சல் 8, பிக்சல் 8 ப்ரோ அக்டோபர் 4 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் போன்றவற்றை பார்க்கலாம்.

01:58 PM (IST) Sep 02

இஸ்ரோவின் வரலாற்று சாதனை.. ஆதித்யா-எல்1 வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்த தலைவர்கள் - யார் யார் தெரியுமா?

சூரியனின் வெளிப்புறப் பகுதியை ஆராயும் இஸ்ரோவின்ஆதித்யா-எல்1 விண்கலத்தின் வெற்றிக்கு பிரதமர் மோடி முதல் பிற அரசியல் தலைவர்கள் வரை பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

01:05 PM (IST) Sep 02

யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் வருமானத்திற்கு இவ்வளவு வரி கட்டணுமா.? மத்திய அரசு புது ரூல்

இப்போது யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் வருமானத்திற்கு இவ்வளவு வரி விதிக்கப்படும் என அரசின் புதிய விதி வெளியிடப்பட்டுள்ளது.

12:56 PM (IST) Sep 02

சேலம் பெரியார் பல்கலைக்கழகமா? வியாபார கூடமா? வாடகை விடும் அளவுக்கு அப்படி என்ன தேவை இருக்கு! அன்புமணி!

பெரியார் பல்கலைக்கழகம் வகுப்பறைகள் தொடங்கி உணவுக்கூடம் வரை வாடகைக்கு விடுவதாக அறிவித்திருப்பது ஏற்க முடியாத ஒன்றாகும் என அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். 

12:43 PM (IST) Sep 02

125 நாட்கள்.. 1,140 புகைப்படங்கள்.. 5 ஆண்டுகள் - சூரியனில் ஆதித்யா-எல்1 என்ன செய்யப்போகிறது தெரியுமா.?

ஆதித்யா-எல்1 விண்கலம் பிஎஸ்எல்வி ராக்கெட்டில் சூரியனை நோக்கி தனது பயணத்தைத் தொடங்கியது. சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா-எல்1 என்னவெல்லாம் ஆய்வு செய்யப்போகிறது என்பதை பார்க்கலாம்.

12:22 PM (IST) Sep 02

RS Shivaji Passed Away: அதிர்ச்சியில் திரையுலகம்..! பிரபல தமிழ் நடிகர் திடீர் மரணம்..!

பிரபல நடிகர் ஆர்.எஸ்.சிவாஜி, இன்று காலை திடீர் என உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
மேலும் படிக்க

12:09 PM (IST) Sep 02

வெற்றிகரமாக விண்ணில் சீறிப் பாய்ந்தது PSLV C57 ராக்கெட் வீடியோ

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெணி மையத்தில் இருந்து விண்ணில் சீறிப் பாய்ந்தது PSLV C57 ராக்கெட். சூரியனை ஆய்வு செய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்1ஐ சுமந்து செல்கிறது.

11:53 AM (IST) Sep 02

BREAKING : வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த ஆதித்யா-எல்1.. சூரியனின் வெளிப்புற பகுதி ஆய்வு - இஸ்ரோ சாதனை

சூரியனின் வெளிப்புற பகுதியை ஆராய்வதற்காக ஆதித்யா-எல்1 என்ற அதிநவீன விண்கலத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் ஆன இஸ்ரோ இன்று விண்ணில் செலுத்தியது.

11:23 AM (IST) Sep 02

உங்களுக்கு 48 மணிநேரம் தான் டைம்! திமுக வட்டச் செயலாளரை வெளியேற்ற நீதிமன்றம் அதிரடி உத்தரவு.!

வாடகை வீட்டை 13 ஆண்டுகளாக காலி செய்ய மறுக்கும் சென்னை திமுக வட்டச் செயலாளர் ராமலிங்கத்தை 48 மணி நேரத்துக்குள் வீட்டை விட்டு வெளியேற்ற மாநகர காவல் ஆணையருக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

11:16 AM (IST) Sep 02

Jailer OTT : வசூலில் சாதனை படைத்த 'ஜெயிலர்' படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது? வெளியான அதிகார பூர்வ அறிவிப்பு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'ஜெயிலர்' திரைப்படம் தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க.. 

11:12 AM (IST) Sep 02

தர்மன் சண்முகரத்தினத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!

சிங்கப்பூர் அதிபராக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் தர்மன் சண்முகரத்தினத்துக்கு பிரதமர் மோடி வாழ்த்து.

Scroll to load tweet…
10:56 AM (IST) Sep 02

ரூ.30 ஆயிரத்துக்கு கீழ் இருக்கும் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர்.. லைசென்ஸ் வேண்டாம்.. முழு விபரம் இதோ !!

ரூ.30 ஆயிரத்துக்கு கீழ் இருக்கும் சிறந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றி பார்க்கலாம். பட்ஜெட் விலையில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரைத் தேடுகிறீர்களா? ஆனால் இந்த வண்டி உங்களுக்கானது. குறைந்த விலையில் அதே அம்சங்களை கொண்டுள்ளது.

10:29 AM (IST) Sep 02

TNPSC : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு எப்போது தெரியுமா.? வெளியான முக்கிய அறிவிப்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சிகுரூப் 4 தேர்வு குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களிடையே மகிழ்ச்சியை உண்டாக்கி உள்ளது.

10:24 AM (IST) Sep 02

Kushi Box Office: முதல் நாளே பாக்ஸ் ஆபீசில் அடித்து நொறுக்கிய 'குஷி' படத்தின் வசூல்? எவ்வளவு தெரியுமா?

சமந்தா - விஜய் தேவரகொண்டா நடிப்பில் நேற்று வெளியான குஷி படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மேலும் படிக்க

10:21 AM (IST) Sep 02

ஒரு Clue கொடுத்தா பிரிச்சு மேஞ்சிடுவீங்களே..! விஜய் டிவி வெளியிட்ட பிக்பாஸ் புதிய புரோமோ வெளியானது..!

'பிக்பாஸ்' நிகழ்ச்சி அடுத்த மாதம் துவங்க உள்ள நிலையில், நிகழ்ச்சி மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமாக புதிய புரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளது. மேலும் படிக்க 

10:17 AM (IST) Sep 02

காயமடைந்த காட்டு யானையை காப்பாற்றச் சென்ற மருத்துவர் யானை மிதித்து சாவு

கர்நாடகாவின் ஹாசன் மாவட்டத்தில் ஷக்லேஷ்புரா வனப்பகுதியில் காயமடைந்த நிலையில் சுற்றித்திரிந்த யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்ற மயக்க ஊசி செலுத்தும் நிபுணரை தாக்கிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

09:30 AM (IST) Sep 02

12ஜிபி டேட்டா.. வெறும் 15 ரூபாய் தான்.. ஜியோவின் இந்த ரீசார்ஜ் பிளான் தெரியுமா.? முழு விபரம் இதோ !!

ஜியோடேட்டா பூஸ்டர் திட்டம் மூலம், வெறும் 15 ரூபாய் முதல் ரீசார்ஜ் செய்து 12 ஜிபி டேட்டாவை பெறுவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

09:27 AM (IST) Sep 02

அதிகாலையில் மனைவியின் தலையில் அம்மிக்கல்லை போட்ட கணவர்.. கதறி துடித்த பிள்ளைகள்.. என்ன காரணம் தெரியுமா?

அதிகாலையில் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்த மனைவியின் தலையில் அம்மிக்கல்லை தூக்கி போட்டு கணவர் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.