சீமான் தனித்து நிற்கவில்லை; அவரை யாரும் சேர்த்துக்கொள்ளவில்லை - அண்ணாமலை விமர்சனம்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனித்து போட்டியிடுவதாக கூறுகிறாார். அவரை யாரும் சேர்த்துக் கொள்ள தயாராக இல்லை என்பதால் தனித்து நிற்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

tamil nadu people need to support a one nation one election scheme says bjp state president annamalai in coimbatore vel

கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பதை பாஜக முழுமையாக வரவேற்கிறது. ஒரே நேரத்தில் அனைத்து தேர்தலும் நடத்த வேண்டும். தேர்தல்கள் மாறி மாறி வருவதால் பல்வேறு பிரச்சினைகள் வருகிறது. இதனால் கொள்கை ரீதியாக முடிவுகள் எடுக்க முடியவில்லை. 

தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக வட கிழக்கு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் உள்ள இராணுவ பாதுகாப்பு குறைக்கப்படுகிறது. கோடிக்கணக்கான நபர்கள் தேர்தல் நடத்த பயன்படுத்தப்படுகிறார்கள். ஒரே நாடு ஒரே தேர்தலை அதிமுக, தமாகா போன்ற கட்சிகள் வரவேற்றுள்ளன. ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற உன்னதமான திட்டத்தை தமிழக மக்கள் வரவேற்க வேண்டும்.

நாட்டின் வளர்ச்சியை சீர்குலைக்க முயற்சி

அதானிக்கு நாம் சப்போர்ட் பண்ண வேண்டிய அவசியமில்லை. அதானி என்ற பெயரில் இந்தியா மீது போர் தொடுக்கிறார்கள். ஜார்ஜ் சோரேஸ் மோடி, இந்தியா மீது வன்மம் கக்கும் நபர். ஜார்ஜ் சோரேஸ் இந்தியாவின் எதிரி. ஜார்ஜ் சோரேசின் ஊதுகுழலாக ராகுல் காந்தி பேசினார். இந்தியாவிற்கு எதிரான சக்திகள் இந்தியா வளர்ச்சியை சீர்குலைக்க முயற்சிக்கின்றன.

400 தொகுதிகளில் வெற்றி நிச்சயம்

தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு எதுவும் செய்யவில்லை என முதல்வர் பொய் சொல்லியுள்ளார். 10 லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகளை மத்திய அரசு தமிழகத்திற்கு தந்ததை 13 பக்க வெள்ளை அறிக்கையாக கொடுத்துள்ளோம். மத்திய அரசு அதிக பணம் வந்த மாநிலம் தமிழகம். ஊழல் குற்றச்சாட்டுக்கள் உள்ளவர்கள் இந்தியா கூட்டணியில் முன்னணியில் நிற்கிறார்கள். இந்தியா கூட்டணியை மக்கள் முழுமையாக நிராகரிப்பார்கள். நாடாளுமன்ற தேர்தலில் 400 தொகுதிகளில் வெற்றி பெறுவோம்.

விசாரணைக்கு பின் முகமலர்ச்சியுடன் வெளியே சென்ற விஜயலட்சுமி; கைது செய்யப்படுகிறாரா சீமான்?

ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற முறை பல நாடுகளில் உள்ளது. நான் பேசாத செய்திகளை பேசியதாக பத்திரிகைகள் போடுகிறார்கள்.‌ எந்த காரணத்திற்காகவும் ஒரு கட்சியை தரம் தாழ்த்தி, தவறாக பேசி கட்சியை வளர்க்க வேண்டும் என நினைக்க மாட்டேன். நான் நேரடியாக கருத்து சொல்லும் நபர். பின்முதுகில் நான் பேசுவதில்லை. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது.

கூலிப்படையை வைத்து கொலை

திமுகவினர் பாஜக நபர்களை குறிவைத்து கூலிப்படை வைத்து கொலை செய்கிறார்கள். திமுக கூலிப்படையை ஏவி விடுகிறது. மாணவர்களுக்கு காலை உணவு தந்த இஸ்கான் கிச்சனை திமுக நிறுத்தியது ஏன்? மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்க வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. காலை உணவு திட்டத்தை நான் தான் கொண்டு வந்தேன் என திமுக சொந்தம் கொண்டாடாமல் சிறப்பாக செயல்படுத்த வேண்டும்.

சீமானை விட 30 சதவீதம்

சீமானின் சவாலுக்கு பாஜக தயார். ஒரு சதவீதம் என்ன? 30 சதவீதம் வாக்குகளை கூடுதலாக வாங்கி காட்டுகிறோம். சீமான் தனியாக நிற்பது கொள்கை அல்ல. யாரும் சேர்க்கவில்லை என்பது தான் காரணம். எங்களுக்குள் கட்சி அடிப்படையில் முரண் இருந்தாலும், திமுகவை எதிர்க்க சீமான் வேண்டும்.

அரசுப்பள்ளியில் மாணவிகள் பொட்டு, பூ வைக்க நோ சொன்ன தலைமை ஆசிரியை; இந்து முன்னணியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு

கோவை கார் குண்டு வெடிப்பை சிலிண்டர் வெடிப்பு என்றது தமிழக காவல்துறைக்கு கரும்புள்ளி. திமுகவிற்கும் கரும்புள்ளி. கோவை ஆபத்தில் இருந்து முழுமையாக தப்பிக்கவில்லை. நேரடியாக மத்திய அரசுடன் தொடர்புடைய நபர் உறுப்பினராக வேண்டும். தீவிரவாத செயலில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை. அப்படி முடிவு செய்தால் ஆளுநர் கையெழுத்திட கூடாது.

வாயில் வடை சுடும் திமுக

திமுக வாயில் வடை சுடுகிறார்கள். சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் தரப்படும் என்ற திமுகவின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. 25 இடங்களில் வெற்றி பெறும் அளவிற்கு தயாராக உள்ளோம். அத்தொகுதிளில் கூட்டணி கட்சிகள் போட்டியிட்டால் அவர்களை வெற்றி பெற செய்வோம்" எனத் தெரிவித்தார்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios