841 girls with 1180 marks

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. தமிழகத்தில், ரேங்க் பட்டியல் இல்லாமல், முதன்முறையாக கிரேடு முறையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 1180 மதிப்பெண் பெற்றவர்கள் ‘ஏ’ கிரேடு என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் 1200-க்கு 1180-க்கு மேல் பெற்றவர்கள் முதல் 700-க்கு கீழ் பெற்றவர்கள் வரை மதிப்பெண் வாரியாக மாணவ, மாணவிகள் விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி, பிளஸ் 2 தேர்வில் 1200-க்கு 1180 மதிப்பெண்ணுக்கு மேல் 1171 பேர் பெற்றுள்ளனர். இவர்களில் மாணவிகள் 841 பேர்; மாணவர்கள் 330 பேர் ஆவர்.

மொத்த மதிப்பெண் மாணவர்கள் மாணவிகள் மொத்த எண்ணிக்கை

1180- க்கு மேல் 330 841 1171

1151 - 1180 வரை 4133 8150 12283

1126 - 1150 வரை 5373 9433 14806

1101 - 1125 வரை 6553 11197 17750

1001- 1100 வரை 36,575 59,331 95,906

0901 - 1000 வரை 55,529 81,320 1,36,849

0801 - 900 வரை 71,841 92,648 1,64,489

0701 - 800 வரை 80,333 88,737 1,69,070

700-க்கு கீழ் 1,54,664 1,26,273 8,93,262