கோவையில் வினோத போட்டி; மகனின் சிகிச்சைக்காக பந்தயத்தில் 6 பிரியாணிகளை சாப்பிட முயன்ற தந்தை
கோவை ரயில் நிலையம் அருகே நடைபெற்ற பிரியாணி சாப்பிடும் போட்டியில் 6 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என அறிவித்ததால் உணவகத்தில் குவிந்த உணவு பிரியர்கள்.
கோவை ரயில் நிலையம் அருகே ரயில் பெட்டியில் அமர்ந்து சாப்பிடும் வகையில் உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கேரளாவைச் சேர்ந்த தொழில் அதிபர் ஒருவர் இக்கடையை நடத்தி வரும் நிலையில், கடையை விளம்பரப்படுத்தும் முயற்சியாக போட்டி ஒன்றை அறிவித்தார். அதன்படி அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ரூ.1 லட்சமும், 4 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், 3 பிரியாணி சாப்பிடுபவர்களுக்கு ரூ.25 ஆயிரமும் பரிசாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
எங்க எனர்ஜி இன்னும் குறையல; வேலை வாய்ப்பு முகாமில் குவிந்த 60+ முதியவர்கள்
இந்த அறிப்பைத் தொடர்ந்து கோவை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகள் மட்டுமின்றி கேரளா மாநிலத்தில் இருந்தும் பல இளைஞர்கள் பங்கேற்று இந்த போட்டியில் ஆர்வமுடன் பிரியாணி சாப்பிட்டனர். தொடர்ந்து கூட்டம் அதிகரித்ததால் சாலையில் இருசக்கர வாகனங்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அங்கு வந்த போக்குவரத்து காவலர்கள் போக்குவரத்திற்கு இடையூறாக நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்தனர். இதனிடையே போட்டியில் பலர் 2வது பிரியாணிக்கே வாயடைத்துப் போக ஒருசிலர் மூன்றவர் பிரியாணியையும் ருசி பார்த்தனர். அரை மணி நேரத்திற்கு கூடுதலாக எடுத்துக் கொண்டவர்களும், போட்டியின் இடையே வாந்தி எடுத்தவர்களும் போட்டியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
மாநில அரசியலுக்கு திரும்புவது எப்போது? இளைஞர்களின் கேள்விக்கு கனிமொழி நேரடி பதில்
இதனிடையே தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கணேச மூர்த்தி என்பவரும் இந்த போட்டியில் பங்கேற்றார். இது தொடர்பாக அவர் கூறுகையில், எனது மகன் பிறவி முதலே ஆட்டிசம் குறைபாட்டால் அவதிப்பட்டு வருகிறான். அவனது மருத்துவ செலவிற்கும், கல்வி செலவிற்கும் என்னிடம் போதிய நிதி இல்லை. நான் தற்போது வரை வாடகை காரை ஓட்டி தான் எனது குடும்பத்தை நடத்தும் நிலையில் உள்ளேன். இந்த போட்டியில் வெற்றி பெற்றால் அதில் கிடைக்கும் பணத்தைக் கொண்டு எனது மகனின் கல்வி மற்றும் மருத்துவ தேவைகளை பார்த்துக் கொள்வேன் என அவர் கூறியது அப்பகுதியில் கூடியிருந்தவர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியது.