பெங்களூருவில் அண்மையில் நடத்தப்பட்ட முதியவர்களுக்கான வேலை வாய்பபு முகாமில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் பலர் பங்கேற்றனர்.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவின் சாந்தி நகரில் அமைந்துள்ள புனித ஜோசப் பல்கலைக்கழகத்தில் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட்டது. அண்மையில் நடத்தப்பட்ட இந்த முகாமில், பொறியாளர், தொழில்நுட்ப வல்லுநர், சில்லறை வணிக பிரதிநிதிகள், அட்மின்கள் என பல்வேறு வேலைகளுக்கு ஆள் சேர்ப்பு நடைபெற்றது.

பலகோடி ஊழியர்களுக்கு இரவோடு இரவாக அரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி; அடிச்சது ஜாக்பாட்

இதில் பங்கேற்றவர்கள் பலரும் கூறுகையில், சில காலத்திற்கு முன்பு ஓய்வு பெற்றேன். ஆனால் வேலை செய்ய வேண்டும் என்ற ஆர்வமும், உந்துதலும் என்னிடம் உள்ளது. வீட்டில் இருப்பதைக் காட்டிலும் ஆசிரியர்கள், மாணவர்கள், சக பணியாளர்களுடன் மகிழ்ச்சியாக பேசி காலத்தை கடப்பதையே விரும்புவதாக சிலர் குறிப்பிடுகின்றனர்.

பிளான் ரெடி; கப்பு எங்களுக்கு தான் - மகளிர் டி20 உலகக்கோப்பை அணி கேப்டன் பேட்டி

அதிலும் சிலர் வயதான காலத்தில் வருமானம் தடைபட்ட பின்னர் குடும்ப உறுப்பினர்கள் பலருக்கும் தாங்கள் பாரமாக மாறி விடுவதால் அதனை தவிர்க்க இந்த முகாமில் பங்கேற்றிருப்பதாக தெரிவிக்கின்றனர். தனியார் மருத்துவ அறக்கட்டளையின் முன்முயற்சியாக இந்த வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டுள்ளது.