பலகோடி ஊழியர்களுக்கு இரவோடு இரவாக அரசு கொடுத்த இன்ப அதிர்ச்சி; அடிச்சது ஜாக்பாட்
EPFO தளத்தில் விரைவில் கொண்டுவரப்பட உள்ள மாற்றத்தால் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள் பயன் அடைய உள்ள நிலையில் அது பற்றி தெரிந்து கொள்வோம்.
government employee
நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான அறிவிப்பு ஒன்று தற்போது நடைமுறைக்கு வரவுள்ளது. அதன்படி EPFO தளம் பல குறைபாடுகளுடன் செயல்பட்டு வந்ததால் அதில் பணம் கிளைம் செய்வது, கேஒய்சி மாற்றுவது போன்ற பல பிரச்சினைகள் நீடிக்கின்றன. இதன் காரணமாக EPFO தளம் மாற்றி அமைக்கப்பட உள்ளது.
Central Government
EPFO தளத்தை மாற்றி அமைக்கும் போது அதில் பணம் கிளைம் செய்வது, கேஒய்சி மாற்றுவது போன்ற பணிகளை எளிதாக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மத்திய அரசின் 1995ம் ஆண்டு ஊழியர் ஓய்வூதிய திட்டத்தில் திருத்தம் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. 6 மாதங்களுக்கும் குறைவான சேவையில் உள்ள ஊழியர்களுக்கு பணத்தை திரும்ப பெறும் பலன்களை வழங்குகிறது.
government employee
இது தொடர்பாக ஊழியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள செய்தியில், இந்த திருத்தம் 6 மாதங்களுக்கும் குறைவான பங்களிப்பு மற்றும் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கானது. குறிப்பிட்ட காலத்திற்கு பின் வேலையை விட்டு வெளியேறும் 7 லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களுக்கு இந்த திட்டம் பயன் அளிக்கும் என்று கருதப்படுகிறது.
ஒவ்வொரு மாதத்திற்கான சேவையும் கணக்கில் கொள்ளப்படும். வழங்கப்படும் சேவையின் விகிதத்தில் பணத்தை திரும்பப் பெறுவதற்கான பலன்கள் வழங்கப்படுவதையும் உறுதி செய்யும் வகையில், அட்டவைண D ஐயும் மத்திய அரசு மாற்றி உள்ளது. தற்போது திரும்பப் பெறக்கூடிய தொகையானது ஒரு உறுப்பினர் சேவையை முடித்த மாதங்கள் மற்றும் EPS பங்களிப்பு பெறப்பட்ட ஊதியத்தை பொறுத்தது.
epfo uan 3.j
ஒரு பணியில் இருந்து 6 மாதங்களுக்கு முன் விலகினால் கூட பணம் திரும்ப கிடைக்கும். புதிய சட்டப்படி 6 மாதங்களுக்கு முன் திட்டத்தில் இருந்து வெளியேறும் உறுப்பினர்களுக்கு பலன்கள் கிடைக்கும் வகையில் மாற்றப்பட உள்ளது. 6 மாதங்கள் அல்லது அதற்கு மேல் வேலை காலத்தை முடித்த பிறகு, உறுப்பினர்கள் பணத்தை திரும்ப பெறும் பலனை பெறுவார்கள். 6 மாதங்களுக்கு முன் வேலையில் இருந்து வெளியேறிய உறுப்பினர்கள் பலன் பெற உரிமை கிடையாது.