மாநில அரசியலுக்கு திரும்புவது எப்போது? இளைஞர்களின் கேள்விக்கு கனிமொழி நேரடி பதில்
மாநில அரசியலுக்கு திரும்புவது, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வராவது குறித்து முதல்வர் ஸ்டாலினும், அமைச்சரவையும் முடிவு செய்யும் என எம்.பி.கனிமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை மைலாப்பூரில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மாணவர்களுடன் ஒரு கலந்துரையாடும் நிகழ்ச்சியை (Youth talks) யூத் டாக்ஸ் என்ற நிறுவனம் நடத்தியது. முன்னதாக, நிகழ்ச்சியில் பங்கேற்க இணையதள வாயிலாகப் பதிவு செய்யப்பட்டது. அதிலிருந்து குறுகிய பட்டியல், தமிழ்நாட்டில் பல்வேறு பகுதியிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் மற்றும் போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் தேர்வர்கள் ஆவலுடன் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், கனிமொழி கருணாநிதியிடம் மாணவர்கள் அரசியல் நுழைவு, வாரிசு அரசியல், திராவிட மடல், இந்தித் திணிப்பு, சாதி மறுப்பு திருமணம், ஆணவக் கொலை, சமூக நீதி உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பினார்கள்.
உச்சநீதிமன்றம் தந்த கிரீன் சிக்னல்.. செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைக்க வாய்ப்பு.! எப்படி தெரியுமா.?
குறிப்பாக அரசியல் நுழைவு குறித்த கேள்விக்கு, தலைவர் கலைஞர் அவர்களின் கைது நிகழ்ச்சி அனைத்துமே புதிதாக இருந்தது. காவலர்களுடன் தான் ஒரு சாதாரண கேள்வி எழுப்பியபோதும், அதனையும் குற்றமாக எதிர்கொண்ட தருணத்தை நினைவு கூர்ந்தார், மேலும் அந்த அசாதாரண தருணத்திலும் கலைஞர் எளிதாக பயமின்றி, தெளிவாக ஒரு போராளியாக எதிர்கொண்டதையும், அதுவே தனது அரசியல் நுழைவு என்று தெரிவித்தார்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள்- சமூகத் தளங்களில் கீழ்த்தரமாகச் சித்தரிக்கப்படுதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் குறித்த கேள்விக்கு, சட்டங்களை விடவும் சமூக ரீதியாக நாம் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். பெண்களின் உரிமைகளை நிலைநாட்ட பல்வேறு ஆக்கப்பூர்வமான செயல்களை செய்ய வேண்டும் என்றார். மேலும் பொதுவாழ்வில் பங்கேற்கும் பெண்கள், இத்தகைய கீழ்த்தரமான விமர்சனங்களைப் புறந்தள்ளிவிட்டு தங்களின் செயல்கள் மூலமாகப் பதிலளிக்க வேண்டும் என்றார்.
குடும்ப அரசியல் என்ற கேள்விக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் நீண்ட அரசியல்- அவசரக் கால சிறைவாசம்- பல்வேறு பதவிகளில் மக்கள் சேவையில் அனுபவம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளைப் பட்டியலிட்டு பதிலளித்தார். கடைசியாக மாநில அரசியலுக்குத் திரும்புவது மற்றும் உதயநிதி ஸ்டாலினுக்குத் துணை முதலமைச்சர் பதவி குறித்த கேள்விக்கு, அதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சரவை தான் முடிவு செய்யும் என்று பதிலளித்தார். பங்கேற்ற அனைத்து இளைஞர்களின் அரசியல் அறிவு மற்றும் சமூகப் பொறுப்பைக் கனிமொழி எம்.பி வெகுவாக பாராட்டினார்.
Ration Shop: ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்! வெளியான முக்கிய அறிவிப்பு!
நிகழ்ச்சி முடித்த பிறகு கனிமொழி கருணாநிதி தனது X தள பக்கத்தில்: இளைஞர்களுடன் பேசுவது, எப்போதும் மனதிற்கு நிம்மதி அளிக்கும் மற்றும் புதிய திறன்களை வெளிக்கொண்டுவரும். Youth Talks IN மூலம் இளம் சந்ததியினருடன் கலந்துரையாடல் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. இந்த அற்புதமான நிகழ்ச்சி பல நல்ல தகவல்களை வழங்கியது மட்டுமல்லாது, நமது இளம் தலைமுறையின் சிந்தனைகள் மற்றும் சாத்தியங்களை மையமாகக் கொண்டது. எதிர்காலத்தில் மேலும் பல பயனுள்ள விவாதங்களை எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டார்.