இங்கிலாந்தில் நடந்துவரும் முத்தரப்பு ஒருநாள் போட்டியில் இந்தியா ஏ மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. 

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்தியா ஏ அணி, இங்கிலாந்து சென்று முத்தரப்பு ஒருநாள் தொடரில் ஆடிவருகிறது. இந்தியா ஏ, இங்கிலாந்து லயன்ஸ் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஏ ஆகிய அணிகளுக்கு இடையே முத்தரப்பு தொடர் நடந்துவருகிறது. 

2 பயிற்சி போட்டிகளில் அபாரமாக ஆடி வெற்றி பெற்ற இந்திய ஏ அணி, இங்கிலாந்து லயன்ஸ் அணிகளுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் பேட்டிங்கில் சொதப்பியது.

அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 232 ரன்களுக்கே ஆல் அவுட்டானது. 233 ரன்களை எளிதாக எட்டி இங்கிலாந்து லயன்ஸ் அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

அதேபோல வெஸ்ட் இண்டீஸ் ஏ அணியையும் இங்கிலாந்து லயன்ஸ் அணி வீழ்த்தியது. இங்கிலாந்திடம் தோல்வியடைந்த இந்தியாவும் வெஸ்ட் இண்டீஸும் இன்று மோதுகின்றன. இரு அணிகளும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்குகின்றன. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் ஏ அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.