Beauty Tips : குறைந்த செலவில் உங்கள் முகத்தை பளபளப்பாக்க 'இந்த' ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க!
இந்த பதிவில், வீட்டில் இருந்தபடியே சில இயற்கையான ஃபேஸ் பேக்குகளைப் பற்றி பார்க்கலாம். அவற்றை பயன்படுத்துவன் மூலம் பளபளப்பான சருமத்தைப் பெறலாம்.
முகத்தின் அழகை அதிகரிக்க சில இயற்கையான ஃபேஸ் பேக்குகளைப் பயன்படுத்தினால், அது நமக்கு பல நன்மைகளைத் தருவது மட்டுமின்றி எந்தவித பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தாது. ஏனெனில், கடைகளில், விற்பனையாகும் சில ஃபேஸ் பேக்குகளில் பல வகையான ரசாயனங்கள் இருப்பதால், அவை சருமத்தை சேதப்படுத்தும். ஆதலால், பலர் வீட்டில் உள்ள சில பொருட்களை வைத்தே ஃபேஸ் பேக்குகள் பயன்படுத்துகின்றனர். அதன்படி, இன்று நாம் இந்த பதிவில், வீட்டில் இருந்தபடியே சில இயற்கையான ஃபேஸ் பேக்குகளைப் பற்றி பார்க்கலாம். அவற்றை பயன்படுத்துவன் மூலம் பளபளப்பான சருமத்தைப் பெறலாம்..
கடலைமாவு மற்றும் எலுமிச்சைப்பழம்: பழங்காலத்திலிருந்தே கடலைமாவு, தோல் பராமரிப்பில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வறண்ட சரும பிரச்சனை உள்ளவர்களுக்கு இது மிகவும் நன்மை பயக்கும் மற்றும் இது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். அதுமட்டுமின்றி, எலுமிச்சை சாறு இறந்த சரும செல்களை வெளியேற்றி சருமத்தை பொலிவாக்கும்.
தயாரிக்கும் முறை: ஒரு ஸ்பூன் கடலைமாவு மற்றும் எலுமிச்சை சாறு இரண்டையும் ஒன்றாக கலந்து கொள்ளளுங்கள். பிறகு அதில் சில துளிகள் ரோஸ் வாட்டரை கலந்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இந்த பேக்கை ஒரு நாளைக்கு இரண்டு முறை தடவினால் சருமம் பளபளப்பாக இருக்கும்.
வாழைப்பழம்: வாழைப்பழ பேக் சருமத்திற்கு பளபளப்பை அளிக்கிறது. இது இயற்கையாகவே சருமத்தை பளபளப்பாக்கும், கரும்புள்ளிகளை நீக்கும், மந்தமான சருமத்தை பொலிவாக்கும்.
தயாரிக்கும் முறை: இதை செய்ய, அரை வாழைப்பழத்தை நன்கு மசித்து அதனுடன் ஒரு முட்டையின் வெள்ளைக்கரு மற்றும் ஒரு ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு கலந்து, அதை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தை கழவுங்கள். வாரத்திற்கு மூன்று முறை இப்படி செய்து வந்தால், இளமையான சருமம் உங்களுக்கே...
இதையும் படிங்க: Beauty Tips : முகப்பருக்களை வேரோடு நீக்க துளசி இலையை இப்படி யூஸ் பண்ணுங்க!!
வெள்ளரி மற்றும் தர்பூசணி: வெள்ளரி மற்றும் தர்பூசணி ஃபேஸ் பேக் சருமத்திற்கு பொலிவைத் தரும். வெள்ளரிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை ஆரோக்கியமாக்கி, பொலிவைத் தந்து, மந்தமான சருமத்தைப் புதுப்பிக்கும். தர்பூசணி சருமத்திற்கு நல்ல டோனராக செயல்படுகிறது. மேலும் இது சருமத்தில் உள்ள கறைகளை நீக்குகிறது.
தயாரிக்கும் முறை: இந்த ஃபேஸ் பேக் செய்ய, இரண்டு ஸ்பூன் வெள்ளரி சாறு மற்றும் தர்பூசணி சாறு எடுத்து ஒன்றாக கலக்கவும். பிறகு இதில் 1 ஸ்பூன் தயிர் மற்றும் பால் பவுடர் சேர்த்து நன்கு கலக்கி, முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள். இதை வாரம் இரண்டு முறை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
இதையும் படிங்க: Beauty Tips : கோடையில் முகம் பளபளப்பாக ஜொலிக்க வேண்டுமா..? வெள்ளரிக்காய் தண்ணீரை இப்படி யூஸ் பண்ணுங்க!
ஓட்ஸ் மற்றும் தக்காளி: பளபளப்பான சருமத்திற்கு ஓட்ஸ் மற்றும் தக்காளி சாறு மிகவும் நல்லது. ஓட்ஸ் இயற்கையாகவே சருமத்தை பொலிவாக்கும் மற்றும் தக்காளி சருமத்திற்கு இயற்கையான பளபளப்பைக் கொடுக்கும்.
தயாரிக்கும் முறை: இந்த ஃபேஸ் பேக் செய்ய, ஒரு ஸ்பூன் தக்காளி சாறு, தயிர் மற்றும் இரண்டு ஸ்பூன் ஓட்ஸ் சேர்த்து நன்றாக கலக்கி, அதை உங்கள் முகத்தில் தடவி 20 நிமிடங்கள் அப்படியே வைத்து, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை பயன்படுத்தினால், சருமம் பொலிவாக இருக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D