Beauty Tips : கோடையில் முகம் பளபளப்பாக ஜொலிக்க வேண்டுமா..? வெள்ளரிக்காய் தண்ணீரை இப்படி யூஸ் பண்ணுங்க!
வெள்ளரிக்காய் உதவியுடன், கோடை வெப்பத்திலிருந்து உங்கள் சருமத்தைப் பாதுகாக்க சில வழிகள் இங்கே உள்ளன. அவை..
கோடையில் வெள்ளரிக்காய் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதனால் தான் இதை பலர் சாலட்டில் சேர்த்து தினமும் சாப்பிடுகிறார்கள். ஆனால் வெள்ளரிக்காய் தண்ணீர் உங்கள் முகத்தின் பொலிவை கொடுகும் என்பது உங்களுக்கு தெரியுமா..?
அதுமட்டுமன்றி, இதிலிருந்து தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக் கோடையிலும் உங்கள் முகத்தை பிரகாசமாக்கும். காரணம், வெள்ளரிக்காய் உடலை குளிர்ச்சியாக்கும். எனவே, இது கோடை காலத்தில் உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. சரி இப்போது, இந்த கட்டுரையில், வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக் தயாரிப்பது எப்படி மற்றும் அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை குறித்து பார்க்கலாம்.
வெள்ளரிக்காய் தண்ணீர்: வெள்ளரிக்காய் தண்ணீரைக் கொண்டு ஃபேஸ் பேக் செய்ய, முதலில் அதன் தோலை உரித்து, பின் அதை மிக்ஸில் போட்டு அரைத்து, சுத்தமான துணியில் அதை போட்டு, அதிலிருந்து தண்ணீரை பிரித்து எடுக்கவும்.
இதையும் படிங்க: Beauty Tips : இனி முகத்திற்கு சோப்புக்குப் பதிலாக இவற்றைப் பயன்படுத்துங்கள்..உங்கள் முகம் பளபளக்கும்!
வெள்ளரிக்காய் தண்ணீர் மற்றும் தேன்: வெள்ளரி நீரில் 2 முதல் 3 சொட்டு தேன் கலக்கவும். பிறகு ஒரு மேக்கப் ஸ்பாஞ்ச் அல்லது பிரஷ் உத்கவியுடன் அந்த நீரை முகத்தில் தடவவும். இதை நீங்கள் தொண்டை மற்றும் கழுத்து பகுதியிலும் தடவலாம். ஏனென்றால், சூரிய ஒளியால் அந்த பகுதி கருமையாக இருக்கும். முகம் நன்கு காய்ந்தவுடன் சுத்தமான நீரால் முகத்தை கழுவவும். இதை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் கோடை காலத்தில் உங்கள் முகம் கருமையாக மாறாது. மேலும் இது உங்கள் முகத்தை எப்போதும் புத்துணர்ச்சியாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும்.
வெள்ளரிக்காய் தண்ணீர் மற்றும் அரிசி மாவு ஃபேஸ் பேக்: வெள்ளரிக்காய் தண்ணீரில் அரை அல்லது 1 ஸ்பூன் அரிசி மாவை கலந்து, அதை முகத்தில் தடவவும். இந்த ஃபேஸ் பேக் முகத்தின் கருமையை நீக்கி, பொலிவைக் கொடுக்கும்.
இதையும் படிங்க: Beauty Tips : முகத்தில் சுருக்கம் இல்லாமல் பட்டுப் போன்ற சருமம் பெற பாலை இப்படி யூஸ் பண்ணுங்க!!
வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக் நன்மைகள்: வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக் கோடை காலத்தில் உங்கள் முகத்தை குளிர்ச்சியாக்கும். காரணம், இதில்
அதிகளவு நீர்ச்சத்து இருப்பதால், அது உங்கள் முகத்திற்கு நன்மை பயக்கும். எனவே, இந்த ஃபேஸ் பேக்கை வாரத்தில் 2 முதல் 3 நாட்கள் பயன்படுத்தலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D