Beauty Tips : இனி முகத்திற்கு சோப்புக்குப் பதிலாக இவற்றைப் பயன்படுத்துங்கள்..உங்கள் முகம் பளபளக்கும்!
சோப்பு மற்றும் ஃபேஸ் வாஷில் ரசாயனங்கள் உள்ளன. இவற்றிற்கு பதிலாக இயற்கையாகவே முகம் பிரகாசமாக இருக்க என்னென்ன பயன்படுத்த வேண்டும் என்பதை குறித்து இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
பொதுவாகவே, நாம் முகத்தை கழுவுவதற்கு சோப்பு பயன்படுத்துவது வழக்கம். ஆனால், இன்று சோப்புகளுக்கு பதிலாக பல வகைகளில் ஃபேஸ் வாஷ்கள் கடைகளில் விற்பனையாகின்றது. இவற்றின் பயன்பாடு மக்கள் மத்தியில் அதிகரித்து உள்ளது. ஆனால், இவை அனைத்தும் முகத்தில் சில தாக்கத்தை ஏற்படுத்தும் தெரியுமா..
முகத்திற்கு இவற்றிற்கு பதிலாக இயற்கையான பொருட்களைப் பயன்படுத்துவது மிகவும் நல்லது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, முகத்திற்கு சோப்பு மற்றும் ஃபேஸ் வாஷ்க்கு பதிலாக இயற்கையாகவே முகம் பிரகாசமாக இருக்க என்னென்ன பயன்படுத்த வேண்டும் என்பதை குறித்து இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம்.
தயிர்: தயிர் இயற்கையாகவே முகத்தைப் பாதுகாக்கிறது. இதற்கு தயிரை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் அப்படியே வைக்க வேண்டும். பிறகு குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பிரகாசமாக இருக்கும்.
இதையும் படிங்க: Beauty Tips : கரும்புள்ளி மறைந்து முகம் பொலிவாக முல்தானி மெட்டியை 'இப்படி' யூஸ் பண்ணுங்க..!!
கற்றாழை ஜெல்: கற்றாழை ஜெல் முக சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க பெரிதும் உதவுகிறது. இதற்கு இரவு தூங்கும் முன் கற்றாழை
ஜெல்லை முகத்தில் தடவவும். காலையில் எழுந்தவுடன் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் உங்கள் முகம் உங்கள் முகம் மென்மையாக மாறும்.
இதையும் படிங்க: Beauty Tips : கோடையில் முகம் பொலிவாக இருக்க 'இந்த' சாக்லேட் ஃபேஸ் பேக்குகளை ஒருமுறை ட்ரை பண்ணுங்க!!
முல்தானி மெட்டி: முல்தானி மெட்டியும் முகத்தை இயற்கையாகவே, பொலிவடைய செய்யும். இதற்கு, ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டியுடன் ரோஸ் வாட்டர் அல்லது சாதாரண நீரில் கலந்து, அதை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பார்ப்பதற்கு பொலிவாக இருக்கும்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D