என்னை பலமுறை காப்பாற்றியவா் தோனி : கோலியின் விசுவாசம்!

இந்திய அணியிலிருந்து நீக்கப்படும் சூழ்நிலைகளில், தோனி பலமுறை தன்னை காப்பாற்றியதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது அறிமுக ஆட்டத்தை தோனியின் கீழ்தான் தொடங்கினார். இலங்கைக்கு எதிரான தனது முதல் போட்டியில் 12 ரன்கள் மட்டுமே கோலி எடுத்திருந்த நிலையில் தனது திறமையை அறிந்த தோனி அடுத்தடுத்த போட்டிகளில் வாய்ப்பு வழங்கினார். சற்று ஆட்டத்தில் தடுமாற்றம் வந்தபோது, சாெற்ப ரன்களில் அவுட் ஆன சில பாேட்டிகளில், தோனி தன்னை தக்கவைத்துக்காெண்டது மறக்க இயலாதது என காேலி தொிவித்தாா்.


அதன் பிறகு தன்னை நிலைப்படுத்திக்கொண்ட கோலி தற்போது இந்திய அணியின் கேப்டனாகும் அளவுக்கு சிறந்த வீரராக உருவெடுத்துள்ளார். இது குறித்து கோலி தெரிவிக்கும்போது தோனிதான் தனக்கு எப்போதுமே கேப்டன் எனக் கூறியுள்ளார். ஒருநாள் போட்டிகளின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள கோலி தலைமையில் இங்கிலாந்துக்கு எதிராக வரும் 15ம் தேதி புனேவில் ஒருநாள் போட்டி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.