டிஆர்பிக்காக சிஎஸ்கே வீரர்களை களமிறக்கிய விஜய் டிவி – குக்கு வித் கோமாளியில் பத்ரிநாத், பாலாஜி!
காமெடிக்கும், அறுசுவைக்கும் பஞ்சாமில்லாத குக்கு வித் கோமாளி 5ஆவது சீசனில் இந்த வாரம் சிறப்பு விருந்தினர்களாக சிஎஸ்கேயின் முன்னாள் வீரர்களாக லட்சுமிபதி பாலாஜி மற்றும் சுப்பிரமணியம் பத்ரிநாத் இருவரும் கலந்து கொண்ட புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
Cooku With Comali 5 - CSK Former Players
ஒவ்வொரு ஆண்டும் விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி நிகழ்ச்சி ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. சமையல் தொடர்பான இந்த நிகழ்ச்சிக்கு கடந்த 4 சீசன்களாக செஃப் தாமு மற்றும் வெங்கடேஷ் பட் இருவரும் நடுவர்களாக இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் தான் வெங்கடேஷ் பட் சன் டிவி தொலைக்காட்சிக்கு செல்லவே, விஜய் டிவி மற்றொரு நடுவரை தேடி வந்த நிலையில், அதற்காக சரியான தேர்வாக மாதம்பட்டி ரங்கராஜ் இடம் பெற்றார்.
Cooku With Comali Season 5 Episode 5
கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி குக் வித் கோமாளி 5ஆவது சீசன் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு மணிமேகலை மற்றும் ரக்ஷன் இருவரும் தொகுப்பாளர்களாக இடம் பெற்றனர். இந்நிகழ்ச்சியில் ஷாலின் ஷோயா, அக்ஷய் கமல், திவ்யா துரைச்சாமி, பூஜா வெங்கட், முகமது இர்ஃபான், வசந்த் வசி, பிரியங்கா தேஷ்பாண்டே, விடிவி கணேஷ், சுஜீதா, ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் குக்குகளாக கலந்து கொண்டுள்ளனர்.
Cooku With Comali 5
இதில் நாஞ்சில் விஜயன் கருத்து வேறுபாடு காரணமாக இந்நிகழ்ச்சியிலிருந்து வெளியேறியுள்ளார் என்று கூறப்படுகிறது. வெங்கடேஷ் பட் அளவிற்கு ரங்கராஜ் பேசவும் இல்லை, காமெடியில் கலக்கவும் இல்லை, கோமாளிகளுடன் ஜெல் ஆகவும் இல்லை. கோமாளிகளும் காமெடிக்கு சண்டை போடும் நிலையும் உண்டாகியுள்ளது. கடந்த சீசன்களாக இருந்த அந்த காமெடி கலாட்டா 4 எபிசோடுகளாகயும் மந்தமாகவே இருக்கிறது.
CWC Season 5
இந்த நிலையில் தான் இந்த வாரம் கிராமத்து விருந்து எபிசோடு நடைபெற இருக்கிறது. இதில் கிராமத்து சாயலில் பானையை கையில் வைத்து கொண்டு டிஸ் செய்யும் டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த எபிசோடில் தங்கதுரை சப்பானி கதாபாத்திரத்திலும், ராமர் நாட்டாமை கதாபாத்திரத்திலும் கலக்குகின்றனர்.
Cooku With Comali Season 5
மேலும், இந்த எபிசோட்டில் புதிய கோமாளியாக காமெடியன் டிஎஸ்கே, டிஆர் கதாபாத்திரத்தில் வந்துள்ளார். இந்த நிலையில் தான் இந்த எபிசோட்டிற்கு சிஎஸ்கே அணியின் முன்னாள் ஜாம்பவான்களான சுப்பிரமணியம் பத்ரிநாத் மற்றும் லட்சுமிபதி பாலாஜி இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டுள்ளனர்.
Subramaniam Badrinath
இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டிருந்தனர். இந்த ஆண்டு சிஎஸ்கே முன்னாள் ஜாம்பவான்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியில் கலக்குகின்றனர். இது தொடர்பான புரோமோ வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
Lakshmipathy Balaji
லட்சுமிபதி பாலாஜி மற்றும் சுப்பிரமணியம் பத்ரிநாத் இருவரும் தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் ஐபிஎல் 2024 தொடர்பாக கிரிக்கெட் வர்ணனை செய்து வருகின்றனர். நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே விளையாடிய 11 போட்டிகளில் 6 வெற்றி, 5 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது.