Mahesh : இறப்புக்கு முன் பவதாரிணி செய்த சேவை.. இசைஞானியை சந்தித்து நன்றி சொன்ன அன்பில் மகேஷ் - வெளியான வீடியோ!

Minister Anbil Mahesh : அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவை சந்தித்து பேசியுள்ளார். இது குறித்த ஒரு வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Minister Anbil Mahesh Met ilayaraja and released awareness video on women empowerment music by bhavatharini ans

தமிழ் திரையுலகில் ஈடு இணை இல்லாத ஒரு இசை கலைஞராக இசை ஞானியாக திகழ்ந்து வருபவர் தான் இளையராஜா. அவருடைய மகள் பவதாரணி கடந்த ஜனவரி மாதம் 25ம் தேதி இலங்கையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். அவருடைய மறைவு தமிழ் திரையுலகில் ஒரு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்பட்டது.

இந்நிலையில் தேசிய விருது வென்ற பாடகியாக திகழ்ந்த பவதாரினி இறப்புக்கு முன்னால் இசை அமைத்த ஒரு பாடல் குறித்த தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது. தமிழக கல்வித்துறை அமைச்சர் திரு. அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று வெளியிட்ட ஒரு ட்விட்டர் பதிவில் பவதாரிணிக்கு நன்றி கூறியுள்ளார் எழுதியுள்ளார்.

Ilayaraja: முகம் நிறைந்த புன்னகை... சாதித்த சந்தோஷம் ரசிகர்களுக்கு இன்ப செய்தி கூறிய இளையராஜா! வைரல் வீடியோ! 

அவர் வெளியிட்ட பதிவில் "தமிழர்களின் பெருமை ஐயா இசைஞானி இளையராஜா அவர்களை அன்பின் நிமித்தமாக சந்தித்தோம். பெண் கல்வியையும், பெண் உரிமையையும் வலியுறுத்தும் விதமாக தமிழக பள்ளிக்கல்வித்துறையால் "பெண் கல்வி, உரிமைகள், விடுதலை" என்னும் தலைப்பில் விழிப்புணர்வு பாடல் ஒன்று தயாரிக்கப்பட்டது".

"அப்பாடல் உருவாக்கத்தில் சகோதரி பவதாரிணி அவர்களின் இசை பங்களிப்பு குறித்து நன்றியோடு எடுத்துரைத்தும். அன்போடு வரவேற்று இசையோடு எங்களை வழிய அனுப்பி வைத்தார்" இளையராஜா என்று அந்த பதிவில் அவர் கூறியிருக்கிறார். மேலும் பவதாரிணி இசையில் உருவான அந்த பாடலின் வீடியோவையும் தனது பதிவில் இணைத்து தனது நன்றியினை தெரிவித்திருக்கிறார் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.

பாலிவுட் உலகில் கூடிய மவுசு.. கிங் கானுடன் மீண்டும் இணையும் "ராக் ஸ்டார்" - படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios