Asianet News TamilAsianet News Tamil

விவாகரத்து சர்ச்சைக்கு மத்தியில் மனைவி சானியா மிர்சாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ஷோயப் மாலிக்..!

சானியா மிர்சா - ஷோயப் மாலிக் தம்பதி விவாகரத்து செய்து பிரிந்துவிட்டதாக தகவல் பரவிய நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் சானியா மிர்சாவுக்கு ஷோயப் மாலிக் பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.
 

shoaib malik wishes sania mirza on her birthday amid their divorce rumours
Author
First Published Nov 15, 2022, 4:52 PM IST

இந்திய டென்னிஸ் வீராங்கனையான சானியா மிர்சா மற்றும் பாகிஸ்தான் ஜாம்பவான் கிரிக்கெட் வீரர் ஷோயப் மாலிக் ஆகிய இருவரும் கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இந்தியா - பாகிஸ்தான் நாடுகளின் அடையாளங்களில் ஒருவராக திகழ்ந்த விளையாட்டு வீரரும் வீராங்கனையும் திருமணம் செய்துகொண்டது பெரும் பரபரப்பாக இருந்தது.  இருவரும் காதலித்து கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிலையில், 2018ம் ஆண்டு ஆண் குழந்தை பிறந்தது.

இந்நிலையில், அண்மையில் சானியா மிர்சாவின் இன்ஸ்டாகிராம் பதிவு, சானியா - ஷோயப் மாலிக் ஜோடியின் பிரிவை உணர்த்தும் சமிக்ஞையாக இருந்தது. “உடைந்த இதயங்கள் எங்கே செல்கின்றன? அல்லாவைக் காண” என்று பதிவிட்டிருந்தார். ஷோயப் மாலிக்கை பிரிந்திருக்கும் சானியா மிர்சாவின் இந்த பதிவு விவாகரத்து சர்ச்சையை எழுப்பியது.

இந்தியாவிற்கு எதிரான டி20 & ஒருநாள் தொடருக்கான நியூசி., அணி அறிவிப்பு.! 2 பெரிய தலைகளுக்கு அணியில் இடம் இல்லை

சானியா மிர்சா - ஷோயப் மாலிக் தம்பதி அதிகாரப்பூர்வமாக விவாகரத்து செய்து பிரிந்துவிட்டதாகவும், அவர்களது மகனுக்கு பெற்றோராக இருப்பார்கள் என்றும் பாகிஸ்தான் ஊடகம் தெரிவித்திருந்தது.

ஷோயப் மாலிக் பாகிஸ்தானின் பிரபல நடிகையுடன் திருமணத்தை தாண்டிய உறவில் இருப்பதை சானியா மிர்சா கண்டுபிடித்துவிட்டதாகவும், அதனால் தான் பிரிந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது. பாகிஸ்தானின் பிரபல மாடலும் நடிகையுமான ஆயிஷா ஓமருடன் கடந்த ஆண்டு நெருக்கமாக ஒரு ஃபோட்டோஷூட்டில் ஷோயப் மாலிக் கலந்துகொண்டார். அந்த ஃபோட்டோக்களில் ஷோயப் மாலிக்கும் ஆயிஷாவும் மிகவும் நெருக்கமாக இருந்தனர். அந்த ஃபோட்டோஷூட்டுக்கு பின்னர் இருவரும் திருமணத்தை தாண்டிய உறவில் இருப்பதாகவும், அது தெரிந்துதான் சானியா மிர்சா ஷோயப் மாலிக்கை பிரிந்துவிட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்த தகவல் இரு நாட்டு விளையாட்டு ரசிகர்களுக்கும் பெரும் வேதனையாக இருந்தது. இந்நிலையில், பாகிஸ்தான் தொலைகாட்சி ஒன்றில் மிர்சா - மாலிக் என்ற நிகழ்ச்சியை இருவரும் இணைந்து தொகுத்து வழங்கவுள்ளதாக தகவல் வெளியானது. சானியா மிர்சா - ஷோயப் மாலிக் ஜோடி விவாகரத்து பெற்றுவிட்டதாக தகவல் பரவிய நிலையில், இருவரும் இணைந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளதாக வெளியான தகவல் ரசிகர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஐபிஎல்லில் இருந்து கைரன் பொல்லார்டு ஓய்வு..! மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிய பொறுப்பு

இந்நிலையில், இன்று 36வது பிறந்தநாள் கொண்டாடும் சானியா மிர்சாவுக்கு ஷோயப் மாலிக் இன்ஸ்டாகிராமில் வாழ்த்து கூறியுள்ளார். இருவரும் இணைந்திருக்கும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட ஷோயப் மாலிக், பிறந்தநாள் வாழ்த்துக்கள் சானியா மிர்சா.. ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வாழ்த்துக்கள். பிறந்தநாளான இன்று மகிழ்ந்திருக்குமாறு வாழ்த்தியுள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios