இந்தியாவிற்கு எதிரான டி20 & ஒருநாள் தொடருக்கான நியூசி., அணி அறிவிப்பு.! 2 பெரிய தலைகளுக்கு அணியில் இடம் இல்லை

இந்தியாவிற்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

new zealand squad announced for t20 and odi series against india

டி20 உலக கோப்பை அரையிறுதியில் தோற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 மற்றும் ஒருநாள் தொடர் வரும் 18ம் தேதி தொடங்குகிறது. இந்திய அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.

இந்த தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்கள் ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணி டி20 தொடரில் ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சியிலும், ஒருநாள் தொடரில் ஷிகர் தவான் கேப்டன்சியிலும் ஆடுகிறது.

ஐபிஎல்லில் இருந்து கைரன் பொல்லார்டு ஓய்வு..! மும்பை இந்தியன்ஸ் அணியில் புதிய பொறுப்பு

வரும் 18ம் தேதி முதல் டி20 தொடர் தொடங்கும் நிலையில், இந்தியாவிற்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் தொடர்களுக்கான  கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து அணியின் முன்னணி வீரர்கள் டிரெண்ட் போல்ட் மற்றும் மார்டின் கப்டில் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. 

நியூசிலாந்து டி20 அணி:

கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), லாக்கி ஃபெர்குசன், டேரைல் மிட்செல், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், க்ளென் ஃபிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி, இஷ் சோதி, பிளைர் டிக்னெர்.

நியூசிலாந்து ஒருநாள் அணி:

கேன் வில்லியம்சன் (கேப்டன்), ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டெவான் கான்வே, லாக்கி ஃபெர்குசன், டேரைல் மிட்செல், ஆடம் மில்னே, ஜிம்மி நீஷம், க்ளென் ஃபிலிப்ஸ், மிட்செல் சாண்ட்னெர், டிம் சௌதி, டாம் லேதம் (விக்கெட் கீப்பர்), மாட் ஹென்ரி. 

இந்திய டி20 அணி:

ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஹர்ஷல் படேல், முகமது சிராஜ், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக். 

டி20 கிரிக்கெட்டில் சொதப்பும் இந்திய அணி.. தோனியை களமிறக்கும் பிசிசிஐ..!

இந்திய ஒருநாள் அணி:

ஷிகர் தவான் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், தீபக் ஹூடா, சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஷபாஸ் அகமது, யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், தீபக் சாஹர், குல்தீப் சென், உம்ரான் மாலிக்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios