Asianet News TamilAsianet News Tamil

Hockey World Cup 2023: கிராஸ்ஓவர் போட்டிகளில் கொரியா, ஜெர்மனி அணிகள் வெற்றி..! காலிறுதி போட்டிகள் விவரம்

ஹாக்கி உலக கோப்பையில் இன்று நடந்த 2 கிராஸ் ஓவர் போட்டிகளில் கொரியா மற்றும் ஜெர்மனி அணிகள் வெற்றி பெற்றன. காலிறுதி போட்டி விவரங்களை பார்ப்போம்.
 

hockey world cup 2023 germany and korea win in crossover matches and here is the detail of quarter finals
Author
First Published Jan 23, 2023, 10:25 PM IST

ஹாக்கி உலக கோப்பை தொடர் ஒடிசாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. உலக கோப்பையில் கலந்துகொண்ட அணிகள் 4 பிரிவுகளாக பிரித்து போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு பிரிவிலும் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த 4 அணிகள் நேரடியாக காலிறுதிக்கு முன்னேறின.

அந்தவகையில், ஆஸ்திரேலியா, பெல்ஜியம், நெதர்லாந்து, இங்கிலாந்து ஆகிய 4 அணிகளும் நேரடியாக காலிறுதிக்கு முன்னேறின. எஞ்சிய 4 இடங்களுக்கு 8 அணிகளுக்கு இடையே போட்டி. 4 பிரிவுகளிலும் புள்ளி பட்டியலில் 2 மற்றும் 3ம் இடங்களில் உள்ள அணிகளுக்கு இடையே கிராஸ் ஓவர் போட்டிகள் நடத்தப்பட்டன.

நேற்று நடந்த 2 கிராஸ் ஓவர் போட்டிகளில் மலேசியாவை வீழ்த்தி ஸ்பெய்ன் அணியும், இந்தியாவை வீழ்த்தி நியூசிலாந்தும் காலிறுதிக்கு முன்னேறின. 

பெரிய தவறு செய்தும் ஐசிசி தண்டனையிலிருந்து இஷான் கிஷன் தப்பியது எப்படி..?

இன்று 2 கிராஸ் ஓவர் போட்டிகள் நடந்தன. ஜெர்மனி - ஃபிரான்ஸ் இடையேயான போட்டியில் அபாரமாக ஆடிய ஜெர்மனி அணி 5 கோல்களை அடிக்க, ஃபிரான்ஸ் ஒரு கோல் மட்டுமே அடித்தது. எனவே 5-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று ஜெர்மனி அணி காலிறுதிக்கு முன்னேறியது.

மற்றொரு கிராஸ் ஓவர் போட்டியில் அர்ஜெண்டினாவும் கொரியாவும் மோதின. இந்த போட்டியில் இரு அணிகளுமே தலா 5 கோல்கள் அடிக்க ஆட்டம் டிராவானது. ஷூட் அவுட்டில் கொரியா 3 கோல்களும், அர்ஜெண்டினா 2 கோல்களும் அடிக்க கொரியா வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

ஜனவரி 24(நாளை) மற்றும் ஜனவரி 25 ஆகிய 2 நாட்களிலும் காலிறுதி போட்டிகள் நடக்கின்றன. 24ம் தேதி 2 போட்டிகளும், 25ம் தேதி 2 போட்டிகளும் நடக்கின்றன. நாளை(ஜனவரி24) ஆஸ்திரேலியா - ஸ்பெய்ன் மற்றும் பெல்ஜியம் - நியூசிலாந்து அணிகள் மோதும் 2 போட்டிகள் நடக்கின்றன.

BBL: பேட்டிங்கில் தெறிக்கவிடும் ஸ்டீவ் ஸ்மித்.. ஒரே பந்தில் 16 ரன்கள்..! வைரல் வீடியோ

ஜனவரி 25ம் தேதி, இங்கிலாந்து - ஜெர்மனி மற்றும் நெதர்லாந்து - கொரியா அணிகள் மோதும் 2 காலிறுதி போட்டிகள் நடக்கின்றன.
 

Follow Us:
Download App:
  • android
  • ios