விக்கெட்டுகளை இழந்து தடுமாற்றம் – நரைனை நம்பி ஏமாந்த கேகேஆர் – 10 ஓவர்களில் 83/5 ரன்கள் எடுத்த டீம்!
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 51ஆவது லீக் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகின்றனர். தற்போது வரையில் கேகேஆர் 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.
Mumbai Indians vs Kolkata Knight Riders, 51st Match
மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 51ஆவது லீக் போட்டி தற்போது வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா பவுலிங் தேர்வு செய்தார். அதன்படி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் சுனில் நரைன் மற்றும் பிலிப் சால்ட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
MI vs KKR, 51st Match
நுவான் துஷாரா முதல் ஓவரை வீசினார். அந்த ஓவரில் பிலிப் சால்ட் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அங்க்ரிஷ் ரகுவன்ஷி 2.2ஆவது பந்தில் 13 ரன்களில் நுவான் துஷாரா பந்தில் ஆட்டமிழந்தார்.
MI vs KKR 51st IPL 2024
இதே போன்று கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் அதே ஓவரின் கடைசி பந்தில் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். ஹர்திக் பாண்டியா ஓவரில் சுனில் நரைன் 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன் மூலமாக முதல் பவர்பிளேயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 4 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்திருந்தது.
Mumbai Indians vs Kolkata Knight Riders, 51st Match
அடுத்து 6.1ஆவது ஓவரிலேயே ரிங்கு சிங் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்த சீசனில் ரிங்கு சிங் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ரிசர்வ் வீரராக இடம் பெற்றுள்ளார். அதன் பிறகு முதல் முறையாக இந்த சீசனில் மணீஷ் பாண்டே களமிறங்கினார். இம்பேக்ட் பிளேயராக வந்த மணீஷ் பாண்டே தற்போது வரையில் 15 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
Mumbai Indians vs Kolkata Knight Riders, 51st Match
தற்போது வரையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது 10 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 83 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் நுவான் துஷாரா 2 ஓவர்கள் வீசி 25 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார். டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெற்ற ஜஸ்ப்ரித் பும்ரா ஒரு ஓவர் வீசி 2 ரன்கள் கொடுத்துள்ளார். விக்கெட் எடுக்கவில்லை. கேப்டன் ஹர்திக் பாண்டியா ஒரு விக்கெட் எடுத்துள்ளார்.