BBL: பேட்டிங்கில் தெறிக்கவிடும் ஸ்டீவ் ஸ்மித்.. ஒரே பந்தில் 16 ரன்கள்..! வைரல் வீடியோ
பிக்பேஷ் லீக்கில் ஹோபர்ட் ஹரிகேன்ஸுக்கு எதிரான போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் வீரர் ஸ்டீவ் ஸ்மித் பேட்டிங் ஆடியபோது ஒரே பந்தில் 16 ரன்கள் கிடைத்தது. அந்த வீடியோ வைரலாகிவருகிறது.
பிக்பேஷ் டி20 லீக் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. சமகாலத்தின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்தும் கூட, ஒரு பக்கா டி20 வீரராக ஸ்டீவ் ஸ்மித் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அதனால் தான் ஐபிஎல்லில் கூட, கேப்டன்சியை இழந்தபின்னர் அவர் ஆடிய அணிகளில் அவருக்கு ஆடும் லெவனில் நிரந்தர இடம் கிடைத்ததில்லை.
ஷாஹித் அஃப்ரிடி டைம் ஓவர்.. பாகிஸ்தான் அணிக்கு புதிய தேர்வுக்குழு தலைவர் நியமனம்
இந்நிலையில், நடப்பு பிக்பேஷ் டி20 லீக் தொடரில் தன்னாலும் அதிரடியாக ஆடமுடியும் என்பதை 2 சதங்கள் விளாசி நிரூபித்துள்ளார் ஸ்மித். சிட்னி சிக்ஸர்ஸ் அணியில் ஆடிவரும் ஸ்டீவ் ஸ்மித், அடிலெய்ட் ஸ்டிரைக்கர்ஸ்(101) மற்றும் சிட்னி தண்டர் (125) அணிகளுக்கு எதிராக அடுத்தடுத்து 2 சதங்களை விளாசி சாதனை படைத்த ஸ்மித், ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் 33 பந்தில் 66 ரன்களை குவித்தார்.
இந்த போட்டியில் சிட்னி சிக்ஸர்ஸ் அணியின் பேட்டிங்கின்போது 2வது ஓவரை ஹோபர்ட் ஹரிகேன்ஸ் பவுலர் ஜோயல் பாரிஸ் வீசினார். அந்த ஓவரின் 3வது பந்தில் மட்டும் 16 ரன்கள் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு கிடைத்தது.
ஐசிசி தேர்வு செய்த 2022ம் ஆண்டின் சிறந்த டி20 லெவன்..! 3 இந்திய வீரர்களுக்கு இடம்
3வது பந்தை ஜோயல் பாரிஸ் நோ பாலாக வீச, அதில் ஸ்மித் சிக்ஸர் அடித்தார். அதற்கு வீசப்பட்ட ரீபாலை வைடாக வீச அது பவுண்டரிக்கு சென்றது. எனவே இதுவரை மொத்தமாக 12 ரன்கள் கிடைத்தது. மீண்டும் அதற்கு ரீபால் வீச, அதை ஸ்மித் பவுண்டரிக்கு அனுப்ப, அந்த பந்தில் மட்டும் 16 ரன்கள் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு கிடைத்தது. ஸ்மித் அந்த ஒரு பந்தில் 10 ரன்கள் அடித்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.