ஷாஹித் அஃப்ரிடி டைம் ஓவர்.. பாகிஸ்தான் அணிக்கு புதிய தேர்வுக்குழு தலைவர் நியமனம்
பாகிஸ்தான் அணியின் புதிய தேர்வுக்குழு தலைவராக ஹரூன் ரஷீத் நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தேர்வு கடந்த சில மாதங்களாகவே கடும் விமர்சனத்துக்குள்ளாகிவந்தது. கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை, டி20 உலக கோப்பைகளுக்கான பாகிஸ்தான் அணி தேர்வு பாரபட்சமாக இருந்ததாக விமர்சனங்கள் எழுந்தன.
அந்த தொடர்களில் பாகிஸ்தான் அணி தோல்விகளை சந்தித்தது மட்டுமல்லாது, அடுத்ததாக பாகிஸ்தானில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளிலும் தோற்று, சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் முதல் முறையாக ஒயிட்வாஷ் ஆகி வரலாற்று படுதோல்வியை சந்தித்தது பாகிஸ்தான் அணி.
ஐசிசி தேர்வு செய்த 2022ம் ஆண்டின் சிறந்த டி20 லெவன்..! 3 இந்திய வீரர்களுக்கு இடம்
அதன்விளைவாக, பாகிஸ்தான் அணியின் தேர்வுக்குழு கலைக்கப்பட்டு, இடைக்கால தேர்வுக்குழு தலைவராக ஷாஹித் அஃப்ரிடி நியமிக்கப்பட்டார். அப்துல் ரசாக், ராவ் இஃப்டிகார் உள்ளிட்ட 4 பேர் அடங்கிய தேர்வுக்குழுவின் இடைக்கால தலைவராக அஃப்ரிடி செயல்பட்டார்.
இடைக்கால தலைவரான அஃப்ரிடியின் பதவிக்காலம் முடிவடைந்தது. இதையடுத்து புதிய தேர்வுக்குழு தலைவராக முன்னாள் வீரரான 69 வயதான ஹரூன் ரஷீத் நியமிக்கப்பட்டுள்ளார். தேர்வுக்குழுவின் மற்ற உறுப்பினர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
சச்சினா கோலியா..? கவாஜாவின் கேள்விக்கு பூசி மொழுகாமல் கறாரா பதிலளித்த கம்மின்ஸ்
ஹரூன் ரஷீத் 1977லிருந்து 1983 வரை பாகிஸ்தான் அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் 23 டெஸ்ட் மற்றும் 12 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கிரிக்கெட் நடவடிக்கைகளுக்கான இயக்குநராகவும், பாகிஸ்தான் அணி மேலாளராகவும் ஏற்கனவே செயல்பட்ட அனுபவம் கொண்டவர் ஹரூன் ரஷீத். பாகிஸ்தான் கிரிக்கெட்டுடன் நெருங்கிய தொடர்பில் இருந்துவந்த ஹரூன் ரஷீத், தேர்வுக்குழு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.