சச்சினா கோலியா..? கவாஜாவின் கேள்விக்கு பூசி மொழுகாமல் கறாரா பதிலளித்த கம்மின்ஸ்
சச்சினா கோலியா என்ற உஸ்மான் கவாஜாவின் கேள்விக்கு பூசி மொழுகாமல் கறாராக பதிலளித்துள்ளார் பாட் கம்மின்ஸ்.
சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்து, சமகாலத்தின் தலைசிறந்த வீரர்களில் ஒருவராக திகழும் விராட் கோலி, முந்தைய தலைமுறையின் தலைசிறந்த பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கருடன் ஒப்பிடப்படுகிறார். சச்சின் டெண்டுல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் 100 சதங்களை விளாசியுள்ள நிலையில், அவரது சத சாதனையை விராட் கோலி (74 சதங்கள்) முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலி ஒப்பிடப்படும் நிலையில், வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆடிய வீரர்களை ஒப்பிடக்கூடாது என்ற கருத்தும் உள்ளது. 1970-80களில் கவாஸ்கர், 1990-2000ம் ஆண்டுகளில் சச்சின் டெண்டுல்கர், சமகாலத்தில் விராட் கோலி என ஒவ்வொரு காலக்கட்டத்திலும் தலைசிறந்த வீரர்கள் இருந்திருக்கின்றனர்.
என் கெரியரில் நான் எதிர்கொண்டதில் மிகக்கடினமான பவுலர் அவர் தான்..! புஜாரா ஓபன் டாக்
ஆனால் வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆடிய வீரர்களை ஒப்பிடக்கூடாது. ஏனெனில் அப்போது இருந்த கிரிக்கெட் விதிகள், தொழில்நுட்பங்கள் இப்போது அப்டேட் ஆகிவிட்டன. கிரிக்கெட் காலத்திற்கேற்ப மாறிவரும் நிலையில், மேலும் டி20 கிரிக்கெட் அறிமுகமான பின், ஆட்ட அணுகுமுறையும் மாறிவிட்ட சூழலில், முந்தைய தலைமுறை வீரர்களுடன் சமகால வீரர்களை ஒப்பிட முடியாது.
வெவ்வேறு காலக்கட்டத்தில் ஆடிய வீரர்களை ஒப்பிடுவது சரியாக இருக்காது என்றாலும், அந்த விவாதம் நடந்துகொண்டே தான் இருக்கிறது. சச்சின் டெண்டுல்கருடன் விராட் கோலியை ஒப்பிடுவது மட்டுமல்லாது, இருவரில் யார் சிறந்தவர் என்றும் பேசப்படுகிறது.
Womens U19 T20 World Cup: இலங்கையை அசால்ட்டா வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி
அந்தவகையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் நடக்கவுள்ள நிலையில், உஸ்மான் கவாஜா - பாட் கம்மின்ஸ் இடையேயான உரையாடலிலும் அந்த கேள்வி எழுப்பப்பட்டது. ஆஸ்திரேலிய அணி இந்தியாவில் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது.
அதற்காக இரு அணிகளும் தயாராகிவருகின்றன. இந்நிலையில், ஆஸ்திரேலிய வீரர்கள் பாட் கம்மின்ஸ் - உஸ்மான் கவாஜா இடையேயான உரையாடலில், சச்சினா கோலியா என கம்மின்ஸிடம் கவாஜா கேட்டார். அதற்கு பூசி மொழுகாமல் விராட் கோலி என்று பதிலளித்தார் கம்மின்ஸ்.